நடிகர் எஸ் ஜே சூர்யா நடித்துள்ள இரண்டு படங்களின் டிரைலர் இன்று ஒரே நாளில் வெளியாக உள்ளது.
Also Read | அட்டகத்தி தினேஷ் நடிக்கும் ‘J பேபி’… அன்னையர் தினத்தன்று ஸ்பெஷல் சர்ப்ரைஸ்… வெளியான தகவல்!
இயக்குனர் to ஹீரோ…
வாலி, குஷி ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எஸ் ஜே சூர்யா அதன் பின்னர் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து நியூ என்ற படத்தை இயக்கினார். அந்த படத்தின் தமிழ் வெர்ஷனில் அவரே ஹீரோவாகவும் நடித்தார். இரு மொழிகளிலும் கதாநாயகியாக சிம்ரன் நடித்தார். அந்த படம் பெற்ற கவனிப்பை அடுத்து தொடர்ந்து அன்பே ஆருயிரே, வியாபாரி, திருமகன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். இதையடுத்து அவர் நடித்த இறைவி படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
ஹீரோ… வில்லன்….
விஜய்யின் மெர்சல் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து கவனத்தைப் பெற்றார். அதே நேரத்தில் மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்து வெற்றி பெற்றார். சிம்புவுடன் அவர் நடித்த மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இப்போது பொம்மை, கடமையை செய் ஆகிய படங்களில் ஹீரோவாகவும் சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.
கடமையை செய்…
யாஷிகா ஆனந்தோடு எஸ் ஜே சூர்யா நடிக்கும் கடமையை செய் திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸூக்கு தயாராகி வந்தது. இந்நிலையில் அந்த படத்தின் உலக திரையரங்க விநியோக சிம்புவின் தந்தை டி ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் படம் மே மாதம் ரிலீஸ் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநாடு படத்துக்கு பிறகு இந்த படத்தில் சிம்பு மறுபடியும் எஸ் ஜே சூர்யாவோடு கைகோர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாளில் 2 டிரைலர்…
இந்நிலையில் டான் படத்தின் டிரைலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாக உள்ள நிலையில் எஸ் ஜே சூர்யா ஹீரோவாக நடித்துள்ள கடமையை செய் திரைப்படத்தின் டிரைலரும் இன்று வெளியாக உள்ளது. இந்த டிரைலரை நடிகர் சிம்பு வெளியிடுகிறார். இதுகுறித்து டிவீட் செய்துள்ள எஸ் ஜே சூர்யா “இன்று எனது இரண்டு டிரைலர்கள் ரிலீஸ் ஆகின்றன. நான் வில்லனாக நடித்துள்ள பிரின்ஸ் சிவகார்த்திகேயனின் டான் டிரைலர் இரவு 7 மணிக்கு வெளியாகிறது. நான் ஹீரோவாக நடித்துள்ள ‘கடமையை செய்’ டிரைலர் மாலை 5 மணிக்கு வெளியாகிறது. கடமையை செய் டிரைலரை வெளியிடும் நண்பன் STRக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8