அஜித் இரட்டை வேடங்களில் நடித்த வாலி (1999) படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா . அதற்கு அடுத்த ஆண்டு விஜய்யை வைத்து அவர் இயக்கிய ’குஷி’ திரைப்படம் தெலுங்கு, ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து ’நியூ’ படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்த அவரின் நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றது. 2014-ல் ’இசை’ படம் மூலம் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்த அவர் தொடர்ந்து ’இறைவி’, ’மான்ஸ்டர்’ போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார்.
இந்நிலையில், டிவிட்டரில் ஒரு ரசிகர், இன்று தொலைக்காட்சியில் ஒலிபரப்பான ’வாலி’ படத்தையும், ’மான்ஸ்டர்’ படத்தையும் குறிப்பிட்டு இரண்டில் எதை பார்ப்பது என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்த எஸ்.ஜே.சூர்யா, “நான் என்ன சொல்ல. ரெண்டுமே நம்ம படம்” என்று கூறினார்.
தற்போது ஹிந்தி சினிமாவின் பிக்-பி அமிதாப் பச்சனுடன் அவர் நடிக்கும் ’உயர்ந்த மனிதன்’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
What to say ..... 😍 rendum Namma Padam 😴 https://t.co/7ANJx8G73a
— S J Suryah (@iam_SJSuryah) December 22, 2019