எஸ் ஜே சூர்யா நடிக்கும் பொம்மை திரைப்படத்தை ராதா மோகன் இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
Also Read | "KGF யாஷ விட 'அவரு' பெரிய ஹீரோ"… திடீரென வைரலாகும் SS ராஜமௌலியின் Throwback பேச்சு…
நடிப்பும் இயக்கமும்…
தமிழ் சினிமாவில் அஜித் நடித்த வாலி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் எஸ் ஜே சூர்யா. அடுத்து அவர் விஜய்யை வைத்து இயக்கிய குஷி திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த இரு படங்களின் வெற்றியும் அவரை முன்னணி இயக்குனராக்கியது. குஷி படத்தை அவர் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்து வெற்றி பெற்றார். இன்றளவும் இந்த இரு படங்களும் அவரின் பேர் சொல்லும் படங்களாக உள்ளன.
அதன் பின்னர் அவர் நியூ திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானதை அடுத்து நடிப்பில் அதிக ஆர்வம் காட்டி நடித்து வருகிறார். இடையில் இசை படத்தை மட்டும் இயக்கினார். மாநாடு, டான் மற்றும் மெர்சல் உள்ளிட்ட படங்களில் வில்லனாகவும் மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்து வெற்றி கலக்கி வருகிறார்.
பொம்மை…
இந்நிலையில் மொழி, அபியும் நானும் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை என்கிற படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில், ப்ரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கின்றார். மான்ஸ்டர் பட வெற்றிக்குப் பிறகு எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் காம்பினேஷன் இணைந்துள்ளது. முதல் முறையாக இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவுடன் ராதாமோகன் இப்படத்தில் கை கோர்க்கிறார். பொம்மை படத்தின் படப்பிடிப்பு 2020 ஆம் ஆண்டே நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் பட ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டுள்ளது.
ஆடியோ உரிமம்…
நீண்ட நாட்களாக படத்தை பற்றி எந்த தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது படத்தைப் பற்றிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் இசை உரிமையை பிரபல இசை வெளியீட்டு நிறுவனமான ‘திங்க் மியுசிக்’ கைப்பற்றியுள்ளது. இதை தற்போது அதிகாரப்பூர்வமாக ஒரு புதிய போஸ்டரோடு அறிவித்துள்ளது. பொம்மை படத்துக்காக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை அபாரமாக வந்துள்ளதாக சில மாதங்களுக்கு முன்னர் எஸ் ஜே சூர்யா அறிவித்திருந்தது ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8