தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து பிறகு நடிகராக மாறியவர் எஸ் ஜே சூர்யா. சமீபத்தில் செல்வராகவன் இயக்கத்தில் இவர் நடித்த நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் வெளியானது.
தற்போது இவர் ராதாமோகனின் இயக்கத்தில் "பொம்மை" படத்திலும், வெங்கட்பிரபு இயக்கத்தில் "மாநாடு" படத்திலும், நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படங்களை தொடர்ந்து "கொலைகாரன்", "லீலை" போன்ற படங்களை எடுத்த இயக்குனர் ஆண்ட்ரு லூயிஸ் உடன் இணைகிறார்.
இந்த படத்தை "விக்ரம் வேதா" படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி இணையர் அமேசான் பிரைம் ஓடிடிக்காக தயாரிக்கின்றனர்.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது. நாகர்கோயிலில் 20 நாட்களும் சென்னையில் 20 நாட்களும் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.