Fakir Others Banner USA

சிவகார்த்திகேயனின் அடுத்தப்பட மேக்கிங் வீடியோ இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘கனா’ திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

Sivakarthikeyan's next Production 'Nenjamundu Nermaiyundu Odu Raja' making video has been released

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் பேனரின் கீழ் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் டிவி பிரபலம் ரியோ ராஜ் நாயகனாக நடித்துள்ளார். மேலும், ஷிரின் காஞ்வாலா, ராதாரவி, ஆர்.ஜே விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. காமெடி கலந்த அரசியல் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஷபிர் இசையமைத்துள்ளார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தில் இருந்து இண்டர்நெட் பசங்க என்ற  பாடலின் லிரிக்கல் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சிவகார்த்திகேயனின் அடுத்தப்பட மேக்கிங் வீடியோ இதோ வீடியோ

Sivakarthikeyan's next Production 'Nenjamundu Nermaiyundu Odu Raja' making video has been released

People looking for online information on Nenjamundu Nermaiyundu Odu Raja, Rio Raj, Sivakarthikeyan Productions will find this news story useful.