“வாங்க BRO ஒரு டான்ஸ போடுவோம்..!” - யுவன் இசையில் அதிரும் சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ சிங்கிள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹீரோ’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

Sivakarthikeyan's Hero 'Malto Kitapuleh' single track is out

‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹீரோ’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். கல்யாணியுடன் ‘நாச்சியார்’ பட நடிகை இவானா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், ரோபோ ஷங்கர், அபய் தியோல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் விறுவிறுப்பான டீசரை கடந்த சில நாட்களுக்கு முன் பாலிவுட் நடிகர் சல்மான் கான் வெளியிட்டார். கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்கிறார். நல்லது செய்ய முகமூடி அணிந்து வரும் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக்கான ‘மால்டோ கிட்டபுலே’ என்ற பாடலின் லிரிக் வீடியோ வரும் நவ.7ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நவ.7ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீசாவதையொட்டி, ஹீரோ படத்தின் முதல் சிங்கிள் டிராக்கை படக்குழுவினர் இன்றே வெளியிட்டுள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ஹீரோ’ படத்தின் ‘மால்டோ கிட்டபுலே’ என்ற சிங்கிள் டிராக் பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் செம லைக்ஸ் குவித்து வருகிறது. இப்படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிசம்பர்.20ம் தேதி ரிலீசாகவுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan's Hero 'Malto Kitapuleh' single track is out

People looking for online information on Hero, KJR Studios, P S Mithran, Sivakarthikeyan, Yuvan Shankar Raja will find this news story useful.