www.garudavega.com

வெளியான சில நாளிலேயே டிவியில் ஒளிபரப்பாகும் டாக்டர் திரைப்படம்! எந்த சேனல்ல? எப்போ தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம், எஸ் கே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள டாக்டர் (Doctor) திரைப்படம் படம் அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது.

SIVAKARTHIKEYAN'S DOCTOR GEARS UP FOR WORLD TV PREMIERE

இந்த டாக்டர் திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும்  தமிழில் வெளியான அதே நாளில் வருண் டாக்டர் (Varun Doctor) என்ற பெயரில் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரவலாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த டாக்டர் திரைப்படம். குழந்தைகள் கடத்தல் பற்றிய இந்த படத்தின் பிளாக் காமெடி காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

SIVAKARTHIKEYAN'S DOCTOR GEARS UP FOR WORLD TV PREMIERE

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு, இளவரசு, ரெட்டின் கிங்க்ஸ்லி, அர்ச்சனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் தொலைக்காட்சி சேட்லைட் ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் நவம்பர் 4 அன்று வரும் தீபாவளிக்கு சன் டிவியில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது டாக்டர் திரைப்படம். இது பற்றிய ப்ரோமோக்களும் ஒளிபரப்பாக உள்ளன. 

SIVAKARTHIKEYAN'S DOCTOR GEARS UP FOR WORLD TV PREMIERE

இதே நாளில் ரஜினி நடிப்பில் அண்ணாத்த படமும், விஷால்-ஆர்யா நடிப்பில் எனிமி படமும் திரையரங்கில் வெளியாக உள்ளன. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

SIVAKARTHIKEYAN'S DOCTOR GEARS UP FOR WORLD TV PREMIERE

People looking for online information on Doctor, Sivakarthikeyan will find this news story useful.