தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்.
Also Read | பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த ரஜினி.. வெளியான ஜெயிலர் படத்தின் GLIMPSE வீடியோ!
ஆரம்ப காலங்களில் மெமிக்ரி, டிவி தொகுப்பாளராக பணியாற்றி படிப்படியாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் தொகுப்பாளராக விஜய் டிவியில் பணியாற்றிய போது கலக்க போவது யாரு?, அது இது எது, ஜோடி நம்பர் 1 போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இது போக பல விருது நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா, பட வெற்றி விழாக்களையும் தொகுத்து வழங்கி உள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சிவகார்த்திகேயனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தமிழ் சினிமாவில் இவர் படங்கெளுக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி வருகிறது.
"டான்" படத்துக்கு பின், இயக்குனர் ப்ரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இந்த ப்ரின்ஸ் படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெளியானது.
ப்ரின்ஸ், படத்தையடுத்து சிவகார்த்திகேயன் அடுத்த படமாக 'மாவீரன்' படத்தில் இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்துள்ளார். மடோன் அஸ்வின், யோகிபாபு நடிப்பில் வெளியான 'மண்டேலா' படத்தை இயக்கி இரண்டு தேசிய விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாவீரன் படத்திற்கு தெலுங்கில் இந்த படத்திற்கு மஹாவீருடு என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாவீரன் படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முழுவீச்சில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது மகனுக்கு காது குத்தி மொட்டை போட சொந்த ஊரான திருவீழிமிழலைக்கு குடும்பத்துடன் வந்து மகனுக்கு காது குத்தி மொட்டை அடித்து சாமி தரிசனம் செய்துள்ளார்.
இந்த திருவீழிமிழலை சிவகார்த்திகேயனின் சொந்த ஊர் ஆகும். இந்தியாவின் தலைசிறந்த நாதஸ்வர கலைஞர்களான சுப்பிரமணியம் பிள்ளை, நீடாமங்கலம் தவில் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இருவரும் சிவகார்த்திகேயனின் கொள்ளுத்தாத்தாக்கள். 'திருவீழிமிழலை சகோதரர்கள்’ என பேர் வாங்கிய கோவிந்தராஜப் பிள்ளை, தட்சிணாமூர்த்தி பிள்ளை இருவரும் சிவகார்த்திகேயனின் தாத்தாக்கள் ஆவர்.
இந்த விழாவில் நடிகர் சூரி மற்றும் இசையமைப்பாளர் இமான் ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து குடும்பத்தினருடன் திருக்கடையூரில் உள்ள தருமபுரம் ஆதீனத்தின் அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் சனி தலமான திருநள்ளாறு சென்று தர்பனேஸ்வரசுவாமி கோயிலில் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் செய்தார்.
Also Read | திருமணமாகி 100-வது நாள்.. "37 வருசத்துல".. மனைவி மகாலட்சுமி பற்றி நெகிழ்ந்த ரவீந்தர்!