நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக 'டான்' திரைப்படம், வரும் மே 13 ஆம் தேதியன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கடைசியாக, டாக்டர் படத்தில் நடித்திருந்த சிவகார்த்திகேயன், அடுத்ததாக சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தை நடித்து முடித்துள்ளார். இதில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் இரண்டாவது முறையாக கைகோர்த்துள்ளார்.
இவர்களுடன் எஸ்ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, ராதாரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் Red Giant Movies சார்பில் உதயநிதி ஸ்டாலின் படத்தை வெளியிடுகிறார்.
சிவகார்த்திகேயன் தான் டான்..
கடந்த சில தினங்களுக்கு முன், டான் படத்தின் டிரைலர் வெளியீடு விழாவின் போது பேசி இருந்த தயாரிப்பாளர் மற்றும் நடிகர் உதயநிதி ஸ்டாலின், "தமிழ் சினிமாவில் இப்போது இரண்டு டான்கள் உள்ளனர். ஒன்று சிவகார்த்திகேயன், மற்றொன்று அனிருத். அவர்கள் இருவரும் மிகப்பெரிய வெற்றிகளை குவிக்கின்றனர். மேலும் அவர்களது காம்பினேஷன் நிச்சயமாக வெற்றியை தரக்கூடியது" என குறிப்பிட்டிருந்தார்.
'நெஞ்சுக்கு நீதி' நிகழ்ச்சி..
இதனையடுத்து, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்தின் பத்திரிகை விழா நடந்தது. அருண்ராஜா காமராஜ் இயக்கி உள்ள இந்த திரைப்படம், பாலிவுட்டில் வெற்றி பெற்றிருந்த ஆர்டிகிள் 15 திரைபடத்தின் அதிகாரபூர்வ ரீமேக் ஆகும். இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இருந்த நிலையில், இது தொடர்பான நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார்.
உண்மையிலேயே அவரு தான் டான்..
"டான் படத்தின் நிகழ்ச்சியின் போது, ஜாலியாக என்னை டான் என உதயநிதி சார் சொல்லிவிட்டு சென்றார். அனைவரும் அதனை சீரியஸாக எடுத்துக் கொண்டு, என்னிடம் அதை பற்றிக் கேள்வி கேட்டனர். அதனை நினைக்கும் போது, ஒரு பெரிய கருப்பு நிற கார் ஒன்றை வாங்கி, கண்ணாடி எல்லாம் போட்டபடி ஜாலியாக போக வேண்டும் என தோன்றுகிறது.
ஆனால், நிஜத்திலேயே டான் என்றால் அது உதயநிதி சார் தான். டான் என்பதற்கு நிறைய விளக்கங்கள் உள்ளது. கையில் ஆயுதம் வைத்திருப்பவர்களை டான் என்று சொல்லலாம். மனதில் தைரியம் வைத்திருப்பவர்களையும் டான் என சொல்லலாம். அந்த வகையில் நான் சொல்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
உதயநிதி நடிப்பில், அருண்ராஜா இயக்கத்தில் உருவாகி உள்ள 'நெஞ்சுக்கு' நீதி திரைப்படம், வரும் மே 20 ஆம் தேதியன்று ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8