"COLLEGE DON" படத்தின் ஐதராபாத் நிகழ்ச்சி.. தெலுங்கில் பேசி அசத்திய சிவகார்த்திகேயன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் உலகெங்கும் வெற்றிகரமாக  (13.05.2022) அன்று ரிலீசாகி உள்ளது.

Sivakarthikeyan Speaks Telugu at Hyderabad College Don Function

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் படத்தில் பிரியங்கா அருள் மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை முறையே கே எம் பாஸ்கரன் மற்றும் நாகூரன் கையாண்டுள்ளனர்.

Sivakarthikeyan Speaks Telugu at Hyderabad College Don Function

சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கல்லூரி மாணவனாகவும் எஸ் ஜே சூர்யா கல்லூரி முதல்வராகவும் நடித்துள்ளனர். நகைச்சுவை மற்றும் காதலுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக டான் உருவாகியுள்ளது. திரைப்பட இயக்குனராக ஆசைப்படும் இளைஞனின் கதையாக டான் படம் உருவாகியுள்ளது. லைக்கா புரொடக்ஷன்ஸ் & SK புரொடக்ஷன்ஸ் படத்தை தயாரித்துள்ளனர். டான் படத்தின் OTT ஒளிபரப்பு உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

இப்படத்தை பிரைம் மீடியா (அமெரிக்கா), யார்க் சினிமா (கனடா), பொலேய்ன் சினிமாஸ் (யுகே மற்றும் ஐரோப்பா), யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்ஸ் (வளைகுடா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை), எம்கேஎஸ் டாக்கீஸ் (ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து) மற்றும் டிஎம்ஒய் (மலேசியா) ஆகியவற்றுடன் இணைந்து வெளிநாடுகளில் ஐபிக்ஸ் நிறுவனம் படத்தை வெளியிட்டுள்ளது. தமிழில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது. NVR  சினிமா நிறுவனம் தெலுங்கில் "காலேஜ் டான்" என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் காலேஜ் டான் படத்தின் சமீபத்திய நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். அதில் படம் பற்றியும், சக நடிகர்கள், இயக்குனர் பற்றியும் பேசினார். மேலும் பாட்ஷா பட ரஜினி போல மெமிக்ரி செய்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மேலும் தனது தந்தை குறித்து பேசியது நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.

மேலும் அடுத்த SK 20 படத்திற்கு ஐதராபாத் வரும் போது தெலுங்கில் பேசுவதாக உறுதி அளித்தார். சில வார்த்தைகளை மட்டும் தெலுங்கில் பேச முயற்சி செய்து பேசவும் செய்தார். தற்போது சிவகார்த்திகேயன் நேரடியாக தெலுங்கு & தமிழ் படமான SK 20 படத்தில் நடித்து வருகிறார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

Nenjuku Needhi Home

"COLLEGE DON" படத்தின் ஐதராபாத் நிகழ்ச்சி.. தெலுங்கில் பேசி அசத்திய சிவகார்த்திகேயன்! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan Speaks Telugu at Hyderabad College Don Function

People looking for online information on College Don, Don, Sivakarthikeyan, SK, Telugu will find this news story useful.