சென்னையில் நடைபெற்ற Behindwoods Gold Medals 2019 விருது விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என்று பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் தெலுங்கு நடிகர் ராம்சரணுக்கு The People's Entertainer Par Exelence Telugu விருது அறிவிக்கப்பட்டது. விருதையும் பதக்கத்தையும் இயக்குநர் ஷங்கர் மற்றும் நிசான் நிறுவனத்தின் தென் இந்திய பொறுப்பாளர் அருண்பிரசாத் சத்தியமூர்த்தி கையால் பெற்ற ராம்சரண் ரசிகர்களுக்கு தன் நன்றியை தெரிவித்தார். இந்த விருதை நூர் முகமத் என்பவருக்கு சமர்ப்பிப்பதாக ராம் சரண் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘சென்னையில் பிறந்து வளர்ந்த நான் இந்த விருதைப் அதே இடத்தில் பெறவது பெருமிதமாக கருதுகிறேன்’ என தெரிவித்தார். பின்னர், தொகுப்பாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க நடனம் ஆட சம்மதித்த அவர், நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடன் மேடையில் ஆட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இருவரும் ‘எதிர் நீச்சல்’ படத்தில் வரும் லோக்கல் பாய்ஸ் பாடலுக்கு நடனமாடினர்.