www.garudavega.com

"வீரமே ஜெயம்".. சிவகார்த்திகேயனின் மிரட்டலான லுக்கில் வைரலாகும் 'மாவீரன்' பட போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

SivaKarthikeyan Maaveeran Movie New Year Poster

Also Read | "அப்பாவோட போய் 'கில்லி' படம் பார்த்தேன்.. அதுக்கப்புறம்".. ராஷ்மிகாவின் 'தளபதி Fan Girl' மொமண்ட்ஸ்..!

ப்ரின்ஸ், படத்தையடுத்து சிவகார்த்திகேயன் அடுத்த படமாக 'மாவீரன்' படத்தில் இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்துள்ளார்.

மடோன் அஸ்வின், யோகிபாபு நடிப்பில் வெளியான 'மண்டேலா' படத்தை இயக்கி இரண்டு தேசிய விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SivaKarthikeyan Maaveeran Movie New Year Poster

இந்த மாவீரன் படத்திற்கு தெலுங்கில் இந்த படத்திற்கு மஹாவீருடு என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாவீரன் படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த மாவீரன் படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு பூஜையுடன் துவங்கியது.

SivaKarthikeyan Maaveeran Movie New Year Poster

இந்த பூஜையில் இயக்குனர் ஷங்கர் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். மேலும் மற்ற முக்கிய வேடத்தில் மிஷ்கின் & சரிதா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தில் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகரான சுனில் இணைந்துள்ளார்.   கடந்த வருடம் அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த 'புஷ்பா' படத்தில் ‘மங்களம் சீனு’ என்ற கதாபாத்திரத்தில் சுனில் வில்லனாக நடித்திருந்தார்.

SivaKarthikeyan Maaveeran Movie New Year Poster

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக விது ஐயனா பணிபுரிகிறார். பரத் சங்கர் இசையமைக்க உள்ளார். இவர்கள் ஏற்கனவே மண்டேலா படத்தில் பணிபுரிந்தவர்கள்.  இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. புத்தாண்டை முன்னிட்டு இந்த போஸ்டர் வெளியாகி உள்ளது.‌வீரமே ஜெயம் என்ற வாசகத்துடன் போஸ்டர் அமைந்துள்ளது. சிவா டிஜிட்டல் ஆர்ட் குழுவினர் இந்த போஸ்டரை டிசைன் செய்துள்ளனர்.

Also Read | குடும்பத்தோடு கேக் வெட்டி கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நடிகை பூர்ணா 😍.. வைரல் போட்டோஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan Maaveeran Movie New Year Poster

People looking for online information on Maaveeran, Maaveeran Movie poster, Sivakarthikeyan will find this news story useful.