www.garudavega.com

திருநீறு பூசிய லுக்கில் சிவகார்த்திகேயன்..! மாவீரன் படத்தின் புதிய போஸ்டர்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்.

SivaKarthikeyan Maaveeran Mahaveerudu New Look Poster Released

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தமிழ் சினிமாவில் இவர் படங்கெளுக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி வருகிறது.

"டான்" படத்துக்கு பின்,  இயக்குனர் ப்ரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இந்த ப்ரின்ஸ் படம்   தீபாவளியை முன்னிட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெளியானது .

ப்ரின்ஸ், படத்தையடுத்து சிவகார்த்திகேயன் அடுத்த படமாக 'மாவீரன்' படத்தில் இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்துள்ளார்.

மடோன் அஸ்வின், யோகிபாபு நடிப்பில் வெளியான 'மண்டேலா' படத்தை இயக்கி இரண்டு தேசிய விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாவீரன் படத்திற்கு தெலுங்கில் இந்த படத்திற்கு மஹாவீருடு என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த மாவீரன் படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முழுவீச்சில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

SivaKarthikeyan Maaveeran Mahaveerudu New Look Poster Released

மேலும் சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு மாவீரன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மாவீரன் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. நெற்றியில் திருநீறு பூசி சிவகார்த்திகேயன் போஸ்டரில் தோன்றியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan Maaveeran Mahaveerudu New Look Poster Released

People looking for online information on Maaveeran, Sivakarthikeyan will find this news story useful.