சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’… நாளை டபுள் ட்ரீட்… லைகா வெளியிட்ட செம்ம அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ’டான்’ திரைப்படம் மே 13 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

Sivakarthikeyan Don movie trailer launch on may 6th

College drama…

சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா, சூரி, பிரியங்கா அருள் மோகன், ஷிவாங்கி மற்றும் பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் டான். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி  இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் அட்லியிடம் உதவியாளராக பணியாற்றியவர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ் கே புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், லைகா புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரித்துள்ளன.  சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கல்லூரி மாணவனாகவும் எஸ் ஜே சூர்யா கல்லூரி முதல்வராகவும் நடித்துள்ளனர். நகைச்சுவை மற்றும் காதலுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக டான் உருவாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டான் திரைப்படம் மே 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

Sivakarthikeyan Don movie trailer launch on may 6th

Aniudh magic…

இந்த படத்துக்கு இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. அனிருத் இசையில் ஏற்கனவே வெளியாகியுள்ள ஜலபுல ஜங்கு மற்றும் பே (bae) ஆகிய பாடல்கள் சமூகவலைதளங்களில் ஹிட்டடித்துள்ளன. சமீபத்தில் வெளியான ப்ரைவேட் பார்ட்டி எனும் சாங் இப்போது சமூகவலைதளங்களில் ஹிட்டாகியுள்ளது.

பிரம்மாண்டமான வெளியீடு…

இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமாக தமிழகத்தில் ரிலீஸ் செய்ய உள்ளனர். இந்நிலையில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த படத்தின் விளம்பரத்துக்காக பிரம்மாண்டமான பேனர்கள் வைக்கப்பட்டு விளம்பரப்படுத்தப் பட்டு வருகின்றன. இதனால் படத்துக்கான் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

Sivakarthikeyan Don movie trailer launch on may 6th

டிரைலர் & ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி…

இந்நிலையில் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என அறிவிக்கபப்ட்டுள்ளது. மேலும் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி ஒன்றும் நாளை நடக்க உள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sivakarthikeyan Don movie trailer launch on may 6thhttps://behindwoods.com/bgm8

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’… நாளை டபுள் ட்ரீட்… லைகா வெளியிட்ட செம்ம அப்டேட்! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan Don movie trailer launch on may 6th

People looking for online information on Lyca, Priyanka Mohan will find this news story useful.