www.garudavega.com

ஜலபுலஜங்கு பாட்டு செஞ்ச சாதனை…. சிவகார்த்திகேயன் பகிர்ந்த சர்ப்ரைஸ் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ஜல புல ஜங்கு பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

Sivakarthikeyan don movie song crossed 50 million views

சூப்பர் சிங்கரில் மா.கா.பா & மைனா நந்தினி மிஸ்ஸிங்.. பிரியங்காவுடன் களமிறிங்கிய CWC பிரபலம்

டாக்டருக்குப் பிறகு டான்

'டாக்டர்' படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் 'டான்'. சிவகார்த்திகேயனும், பிரியங்கா மோகனும் இந்தப் படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இவர்களுடன் நடிகர் S.J.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், R.J.விஜய், சிவாங்கி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி, சிங்கம்புலி, ஜார்ஜ், ஆதிரா மற்றும் பல நடிகர்கள்  ‘டான்’ படத்தில்  இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் டான் படத்திற்கு இசையமைக்கிறார். டான் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  கடந்த ஆண்டு (10.12.2021) அன்று இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக படக்குழு டிவிட்டரில் அறிவித்தது.

Sivakarthikeyan don movie song crossed 50 million views

ஜலபுலஜங்கு பாடல்

இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள டான் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த படத்தின்ம் முதல் சிங்கிள் பாடலான ஜலபுல ஜங்கு 15.12.2021 அன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அனிருத் இசையில் லோகேஷ் வரியில் உருவான இந்த பாடல் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் இந்த பாடலுக்கு தாங்கள் நடனமாடி ரீல்ஸை வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில் இப்போது இந்த பாடல் யுடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.இதனை முன்னிட்டு படக்குழு உருவாக்கியுள்ள ஒரு வீடியோவை சிவகார்த்திகேயன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

Sivakarthikeyan don movie song crossed 50 million views

தள்ளிவைக்கப்பட்ட டான் ரிலீஸ்

டான் படம் வரும்  வரும் மே மாதம் 13  ஆம் தேதி வெளியாக உள்ளது.  முதலில் மார்ச் 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் லைகா நிறுவனம் வெளியிடும் ஆர் ஆர் ஆர் படம் அந்த தேதியில் வெளியாவதால் சிவகார்த்திகேயன் தன்னுடைய டான் படத்தைத் தள்ளிவைக்க சம்மதித்துள்ளார். இதற்காக லைகா நிறுவனம் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்திருந்தது. இந்த படத்தில் கல்லூரி மாணவராக நடிக்க கனிசமாக தனது உடல் எடையைக் குறைத்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் இருந்து வெளியான மற்றொரு பாடலான ’bae ‘ பாடலும் கவனத்தைப் பெற்றுள்ளது.

”கடைசியா எப்ப அத செஞ்சீங்க, ஞாபகம் இருக்கா?” ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் சூப்பர் ஸ்டேட்டஸ்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan don movie song crossed 50 million views

People looking for online information on சிவகார்த்திகேயன், ஜலபுலஜங்கு பாட்டு, Don Movie, Don movie song, Million views, Sivakarthikeyan will find this news story useful.