சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் உலகெங்கும் வெற்றிகரமாக இன்று ரிலீசாகி உள்ளது.
Also Read | BOX OFFICE-ல் பட்டைய கிளப்பிய மகேஷ்பாபு படம்.. முதல் நாள் வசூல் மட்டும் இம்புட்டா? அம்மாடியோவ்
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் படத்தில் பிரியங்கா அருள் மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை முறையே கே எம் பாஸ்கரன் மற்றும் நாகூரன் கையாண்டுள்ளனர்
சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கல்லூரி மாணவனாகவும் எஸ் ஜே சூர்யா கல்லூரி முதல்வராகவும் நடித்துள்ளனர். நகைச்சுவை மற்றும் காதலுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக டான் உருவாகியுள்ளது. திரைப்பட இயக்குனராக ஆசைப்படும் இளைஞனின் கதையாக டான் படம் உருவாகியுள்ளது. லைக்கா புரொடக்ஷன்ஸ் & SK புரொடக்ஷன்ஸ் படத்தை தயாரித்துள்ளனர். டான் படத்தின் OTT ஒளிபரப்பு உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
இந்நிலையில் இன்று வெளியான டான் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
படங்களின் REFERENCE-கள் படத்தில் ஆங்காங்கே அமைந்துள்ளன. முக்கியமாக படத்தின் துவக்க காட்சிகளில் வகுப்பறையில் எந்திரன் படத்தை சிவகார்த்திகேயன் பார்ப்பது முதல் REFERENCE அமைந்துள்ளது.
முதல் பாதியின் 30 நிமிடங்களை கடந்த பின் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் சக்கரவர்த்தியும் - பிரியங்கா மோகனின் அங்கையற்கன்னி கதாபாத்திரமும் படம் பார்க்க தியேட்டருக்கு செல்வர். அப்போது அங்கு சிவாஜி திரைப்படம் ஒடிக்கொண்டு இருக்கும். அடுத்த காட்சியில் சிவகார்த்திகேயன், சிவாஜி பட ரஜினிகாந்த் போல மெமிக்ரி செய்து அசத்தியிருப்பார். அடுத்ததாக கல்லூரி விழாவில் ரஜினி நடித்த பொல்லாதவன் படத்தின் "நான் பொல்லாதவன்" பாடலை பிரத்யேகமாக இசைத்து சிவகார்த்திகேயன் & நண்பர்கள் நடனமாடுவார்கள்.
இப்படத்தை பிரைம் மீடியா (அமெரிக்கா), யார்க் சினிமா (கனடா), பொலேய்ன் சினிமாஸ் (யுகே மற்றும் ஐரோப்பா), யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்ஸ் (வளைகுடா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை), எம்கேஎஸ் டாக்கீஸ் (ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து) மற்றும் டிஎம்ஒய் (மலேசியா) ஆகியவற்றுடன் இணைந்து வெளிநாடுகளில் ஐபிக்ஸ் நிறுவனம் படத்தை வெளியிட்டுள்ளது. தமிழில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8