Reliable Software
www.garudabazaar.com
www.garudavega.com

'டாக்டர்' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழுவினர்... தேர்தலால் தள்ளி போகும் ரிலீஸ்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் முதன் முறையாக இணைந்த டாக்டர் படத்தின் இரண்டாம் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா அருள் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், கோவா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. மேலும் யோகிபாபு, பிக்பாஸ் அர்ச்சனா, குக் வித் கோமாளி தீபா  உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

sivakarthikeyan doctor new release date 'டாக்டர்' படத்தின் புதிய ரிலீஸ்

அதேபோல் ஹீரோயின் பிரியங்காவுடன் அவர் அடுத்து வரவிருக்கும் 'டான்' படத்திலும் இணைந்து நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் டாக்டர் படத்தின் முதல் பாடலான 'செல்லம்மா' கடந்த வருடம் ரிலீசாகி அமோக வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இரண்டாம் சிங்கிலான 'ஓ பேபி' பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் டாக்டர் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை தற்போது படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதாவது ஆரம்பத்தில் மார்ச் 26 அன்று டாக்டர் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில்  அதனையடுத்த சில நாட்களிலேயே தேர்தல் நடைபெற இருப்பதால். தற்போது டாக்டர் படத்தின் ரிலீஸ் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து படக்குழுவினர் அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றனர். அந்த அறிக்கையில் "புதிய வெளியீட்டு தேதி ஒன்றை முடிவு செய்துள்ளோம்‌. டாக்டர்‌. வருண்‌ மற்றும்‌ குழுவினரை திரையரங்குகளில்‌ ரமலான்‌ பண்டிகை அன்றிலிருந்து சந்திக்கலாம்‌. இந்த சமயத்தை எங்களது டாக்டரை மெருகேற்ற பயன்படுத்த உள்ளோம்‌. நீங்கள்‌ தவறாமல்‌, மறக்காமல்‌ வாக்களிக்கவும்‌! நினைவிருக்கட்டும்‌ ஒவ்வொரு வாக்கும்‌ முக்கியமானது. திரையரங்குகளில்‌ சந்திக்கலாம்‌" என்று கூறியுள்ளனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan doctor new release date 'டாக்டர்' படத்தின் புதிய ரிலீஸ்

People looking for online information on Doctor, Sivakarthikeyan will find this news story useful.