கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் பொன்ராம் மற்றும்  இயக்குநர் எம்.பி. கோபி ஆகியோரின் சொந்த ஊரான உசிலம்பட்டியில் அவர்கள் படித்த அரசு மேல் நிலைப்பள்ளியில், உசிலம்பட்டி வட்டார இளைஞர்களையும்

Sivakarthikeyan appreciates Director Ponram's Usilampatti Cricket Team

மாணவர்களையும் ஊக்கு விப்பதற்காக ஒரு மாபெரும் இரண்டு நாள் கிரிக்கெட் விழா நடத்தினர். அதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பதினாறு அணிகள் கலந்து கொண்டனர்.

இதில் வெற்றி பெற்ற அணியை  நடிகர் சிவகார்த்திகேயன், சென்னைக்கு வரவழைத்து ராஜேஷ்.M இயக்கத்தில் உருவாகி வரும் 'மிஸ்டர் லோக்கல்' படப்பிடிப்பில் மதியம் விருந்தும் விருதும் கொடுத்து அவர்களை கௌரவப்படுத்தினார்.

''கிராமத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த எங்களுக்கு சென்னையில் சிவகார்த்திகேயனின் கரங்களால் விருது வழங்கியதை நினைத்து பெரும் மகிழ்ச்சியடைகிறோம்'' என்று வெற்றி பெற்ற அணியினர் கூறினர்.

இதை பற்றி இயக்குநர்கள் பொன்ராம் கூறியதாவது, ''நாங்கள் படித்த அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு விழா  நடத்த வேண்டுமென்று ரொம்ப நாள் ஆசைப்பட்டோம். அப்போதுதான் சிவகார்த்திகேயன் அவர்களின் தயாரிப்பில் வெளிவந்த கனா படம் எங்களுக்கு தூண்டுதலாக இருந்தது. அந்த ஸ்பார்க்கில் எங்கள்

ஊரில் கிரிக்கெட் மேட்ச் நடத்தலாம் என்று முடிவு எடுத்தோம்.

அதன் காரணமாக சிவகார்த்திகேயனிடம் நாங்கள் நடத்தும் கிரிக்கெட் விழாவிற்கு வருகை தருமாறு அன்போடு அழைத்தோம். அவர் இடைவிடாத படப்பிடிப்பில் இருக்கும்

காரணத்தால் விழாவில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் இருந்தார்.  அதனால் அவருக்கு பதிலாக அவர் தயாரித்த 'கனா' பட ஹீரோ தர்ஷன், அந்த படத்தில் காமெடியனாக நடித்த டேனியல் பாக்கியராஜ்,  அவரது ரசிகர் மன்ற மாநில  தலைவர் மோகன் தாஸ் மற்றும் 'மிஸ்டர் லோக்கல்' பட இயக்குநர் ராஜேஷ்.M ஆகியோரை விழாவிற்கு அனுப்பி வைத்தார். அது மட்டும் இல்லாமல் வெற்றி பெற்ற அணியினரை சென்னைக்கு வரவழைத்து விருதும் விருந்தும் கொடுத்து கௌரவப்படுத்தினார்'' என்றார்..

Sivakarthikeyan appreciates Director Ponram's Usilampatti Cricket Team

People looking for online information on Cricket, Darshan, Kanaa, M Rajesh, Ponram, Sivakarthikeyan will find this news story useful.