www.garudavega.com

PONNIYIN SELVAN : "அருண்மொழி வர்மனாக கமல்.. வந்தியத்தேவனாக ரஜினி" - அப்பவே சொன்ன சிவாஜி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கியுள்ளார். 2 பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” வரும் 2022 செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார்.

sivaji want rajini to do vandhiyathevan character kamal reacts

இந்நிலையில், இந்த படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா, நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவில், உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர்கள் ஷங்கர், மிஷ்கின், நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ் என ஏராளமான திரை பிரபலங்கள், பொன்னியின் செல்வன் படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஜெயராம், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள். இதில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரங்களான நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.

பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபனின் தோற்றங்கள் வெளியாகின. மேலும் இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி பூங்குழலி கதாபாத்திரத்திலும், நடிகை சோபிதா துலிபாலா வானதி கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

sivaji want rajini to do vandhiyathevan character kamal reacts

பொன்னியின் செல்வன் படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஒன்றாக மேடையில் தோன்றி, பொன்னியின் செல்வன் நாவல் குறித்து ஏராளமான சுவாரஸ்ய தகவல்களை ஒன்றாக பகிர்ந்து கொண்டனர்.   

அப்போது, பொன்னியின் செல்வன் திரைப்படமாக எடுக்கப்பட்டால், ரஜினிகாந்த் எந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது பற்றி மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் சொன்ன விஷயம், தற்போது தெரிய வந்துள்ளது. அதன்படி, பொன்னியின் செல்வனில் வரும் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்க வேண்டும் என சிவாஜி கணேசன் விரும்பினார்.

sivaji want rajini to do vandhiyathevan character kamal reacts

ஆனால், அந்த கேரக்டரில் நடிக்க கமல் விருப்பம் கொண்டார். இது பற்றி சிவாஜியிடமே கமல் கூறி உள்ளார். பின்னர் தனக்கு எந்த கதாபாத்திரம் சரியாக இருக்கும் என்பதையும் சிவாஜியிடம் கமல் கேட்டுள்ளார். அதற்கு அருண்மொழி வர்மன் கதாபாத்திரம் கமலுக்கு பொருத்தமாக இருக்கும் என்றும் சிவாஜி பதில் அளித்துள்ளார்.

முன்னதாக, பொன்னியின் செல்வன் கதையை சீக்கிரமாக படமாக எடுக்க தன்னிடம் எம்.ஜி.ஆர் அறிவுறுத்தியதாக கமல் மேடையில் குறிப்பிட்டிருந்தார். அதே போல, வந்தியத்தேவன் கதாபாத்திரத்திற்கு தான் பொருத்தமாக இருப்பார் என ஜெயலலிதா குறிப்பிட்டதை ரஜினிகாந்த் மேடையில் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Sivaji want rajini to do vandhiyathevan character kamal reacts

People looking for online information on Arunmozhi Varman, Kamal Haasan, Ponniyin Selvan, PS1 Trailer Launch, Rajinikanth, Sivaji Ganesan, Vandhiyathevan will find this news story useful.