சிவாங்கி விஜய் டிவி நிகழ்ச்சிகளின் செல்லப்பிள்ளையாகவே மாறிவிட்டார் என்று சொல்லலாம்.
சூப்பர் சிங்கராக அறிமுகமான சிவாங்கி, பாடகராஜ ஜொலித்தது மட்டுமில்லாமல், விஜய் டிவியின் அனைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் ஸ்டாராகி வருகிறார். குறிப்பாக குக் வித் கோமாளியில் அஸ்வினுடன் சிவாங்கி கலக்குகிறார். இவர்களின் கலாட்டாவை பார்ப்பதற்கு பலரும் விரும்புகின்றனர்.
சிவாங்கியின் சேட்டைகள் நிறைந்த குறும்புத்தனத்தால் அவருக்கு ரசிகர்கள் ஏராளமாகிவிட்டனர். இந்நிலையில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் செட்டில் கார்த்திக் தேவராஜின் உதவியுடன் கீ போர்டு வாசித்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்ட சிவாங்கி, கீ-போர்டு குருனா கார்த்திக் தேவராஜ் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
வாசிப்பது ஹேப்பி பர்த்டே டூ யூ தான் என்றாலும், சிவாங்கி வாசிக்கும்போது பின்னணியில் வாசிக்கும் கலைஞர்கள் கானா மோடில் ரிதம் வாசித்து சிவாங்கியை கலாய்த்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.