பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சரியாக இன்று மதியம் 1.04 மணிக்கு நம்மை விட்டு பிரிந்தார். அவரது மறைவு நாடு முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தி வருகிறது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவரது இறுதிச்சடங்கு நாளை அவரது தாமரைப்பாக்கம் ஃபார்ம் ஹவுசில் நடைபெறும் என்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது.
முன்னதாக எஸ்பிபி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை முன்பு ஏராளமான பிரபலங்கள், உறவினர்கள் கதறி அழுத காட்சியை காண முடிந்தது. தற்போது அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.