பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பெற்று வரும் எம்.ஜி.எம் மருத்துவமனை தற்போது அவசர அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளனர்.
அதில் "கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் எக்மோ சிகிச்சை மற்றும் உயிர்காப்பு சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி வருகிறது, எனவே மேலும் அவருக்கு அதீத உயிர்காப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை அதிகாரிகள் அவரது உடல்நிலையை கூர்ந்து கவனித்து வருகிறோம்" என்று அவசர அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் பாடகர் SP பாலசுப்ரமணியம் அவர்களை அவரது நெருங்கிய நண்பரான நடிகர் கமல் ஹாசன் நலம் விசாரிக்க நேரில் செல்ல இருக்கிறார். எனினும் இந்த அறிக்கை அவரது ரசிகர்களை சோகமடைய செய்துள்ளது. எனவே அனைவரும் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.