மின்னலே, பாரதி, காதல் கொண்டேன் உள்ளிட்ட படங்களில் முறையே ஹே அழகிய தீயே, நிற்பதுவே நடப்பதுவே, தேவதையைக் கண்டேன் ஆகிய பாடல்களை பாடியுள்ளார்.
Also Read | Rambha : குழந்தையாகவே மாறிய நடிகை ரம்பா.. செம Vibe-ல இருக்காங்க.. க்யூட் வீடியோ 😍
இவை தவிர அருண்பாண்டியன் இயகிய விகடன் எனும் படத்தில் நடித்திருந்த இவர், அஜித் நடித்த திருப்பதி படத்தில் அவருக்கு சகோதரராக நடித்திருப்பார். இந்நிலையில் ‘காந்தாரா’ இயக்குநர் ரிஷப் ஷெட்டி குறித்த தமது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
கன்னட மொழியில் உருவாகிய ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான காந்தாரா செப்டம்பர் 30 அன்று கன்னட மொழியில் வெளியானது. காந்தாரா படம் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இதனால், கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் படத்தின் வசூல் அதிகரித்தது. இதே தலைப்புடன் இந்தப் படத்தின் தமிழ் பதிப்பு தமிழ்நாட்டிலும் வெளியானது.
கேஜிஎஃப் புகழ் ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, நடித்துள்ள இந்தப் படத்தின் கதை நில அரசியலை மையப்படுத்திய அரசு மேலாண்மை, நிலச்சுவான்தார்கள் மற்றும் பழங்குடியின மக்களின் பார்வைகளை ஒரு புள்ளியில் இணைந்து எழுதப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டி குறித்து பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா தமது வலைப்பக்கத்தில் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அதில், “ரிஷப் ஷெட்டி தனது தாய்மொழி அல்லாத தமிழ், தெலுங்கு, ஹிந்தி, இங்லிஷ் ஆகிய மொழிகளைச் சரளமாகப் பேசுகிறார். தனக்கு வசதியான வேட்டி சட்டை அணிந்தே எந்தவொரு பெரிய சபையானாலும் சென்று அமர்கிறார். இந்திய மற்றும் அவரது பிராந்திய கலாச்சாரங்களில் அவருக்கு இருக்கும் பற்றை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளத் தயங்குவதில்லை.
தனது வழிபாட்டு நம்பிக்கைகளை மூடி மறைப்பதுமில்லை, பிறரது மத நம்பிக்கைகளைச் சாடுவதும் இல்லை. எந்த குறிப்பிட்ட சமூகத்தையும் பழிப்பதும் இல்லை. எல்லா புகழையும் பெருமைகளையும் தனதாக எண்ணாமல் கூட்டு முயற்சி என்று மட்டுமே எல்லா நேரங்களிலும் குறிப்பிடுகிறார். தனது படைப்புகளை முதலில் இலவசமாகவே சந்தைப் படுத்தி, தனக்கென சந்தை ஒன்றை உருவாக்கிக் கொண்டு அதில் இன்று பெரிய வணிகம் செய்யும் புதிய வியாபார யுத்தியையும் செய்து காட்டியுள்ளார்.
ஊடகங்களின் கடுமையான கேள்விகளுக்கு சற்றும் தடுமாறாமல் அதே நேரம் மரியாதையாக பதிலளிக்கிறார். இறுதியாக, திரு. ரஜினிகாந்த் போன்றே வசீகரமான கலகல சிரிப்பும், சுறுசுறுப்பும், (கொஞ்சம் அவரது சாயலும்) ஆன்மீக நாட்டமும் கொண்டுள்ளார். ரிஷப் ஷெட்டி தன் வழியில் செல்கிறார்” என குறிப்பிட்டுள்ளார்.
Also Read | இந்தா வந்துருச்சுல்ல.. “நாளை நமதே..” .. பிரம்மாண்ட சூப்பர் சிங்கர் 9வது சீசன்..! எப்போ?