இந்த வருடத்திற்கான கிராமி விருது வழங்கும் விழாவில் இந்திய - அமெரிக்க பாடகியான ஃபால்குனி ஷா விருது பெற்றுள்ளார். இதனை அடுத்து அவரது ரசிகர்கள் சமூக வலை தளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
“நான் ஒரு வீடு, எனக்கு உயிர் இருக்கு”… யுவன் வெளியிட்ட “அனந்தம்” டீசர்!
கிராமி
கிராமபோன் என்பதன் சுருக்கமாக கருதப்படும் 'கிராமி' என்ற பெயரில் வருடந்தோறும் இசை கலைஞர்களுக்கு விருது அளிக்கப்படுவது வழக்கம். உலக அளவில் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாக ஆஸ்கர் கருதப்படுவது போல, இசைத் துறையில் கிராமி விருதுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த விழாவில் இசைத்துறையில் சிறந்த பங்காளிப்பாற்றும் கலைஞர்களுக்குப் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும்.
அதன்படி 64 வது கிராமி விருது வழங்கும் விழா இன்று அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்று வருகின்றன. இந்த விழாவில் 86 பிரிவுகளின் அடிப்படையில் கிராமி விருதுகள் அளிக்கப்படுகின்றன.
ஃபால்குனி ஷா
இந்தியாவின் மும்பையில் பிறந்த ஃபால்குனி ஷா, சிறுவயது முதலே இசை மற்றும் பாடலில் ஆர்வம் கொண்டவராக இருந்தவர். மும்பையில் வசித்தபோது, ஜெய்ப்பூர் கரானா என்னும் பாரம்பரிய இசையை கற்ற ஷா, ஒரு நாளைக்கு 16 மணி நேரம் இசை மற்றும் பாடல் பயிற்சி செய்யும் வழக்கம் கொண்டவர். இவர் சாரங்கி/குரல் மாஸ்டர் உஸ்தாத் சுல்தான் கானிடம் இசை பயிற்சியை பெற்றிருக்கிறார்.
2000 ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறிய ஷா, அங்கும் தனது இசை பயிற்சியை தொடர்ந்தார். 2001 ஆம் ஆண்டு பாஸ்டனை மையமாக கொண்டு இயங்கும் இந்தோ-அமெரிக்கன் இசைக்குழுவான கரிஷ்மாவில் முன்னணி பாடகராக சேர்ந்தார் ஷா.
கிராமி விருது
இந்நிலையில், 64 வது கிராமி விழாவில் 'A Colorful World' ஆல்பத்திற்காக சிறந்த குழந்தைகள் ஆல்பம் பிரிவில் ஷா விருதினை வென்றிருக்கிறார் இவர். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,"இன்றைய தினத்தை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. கிராமி விழாவில் எனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது எனக்கு வழங்கப்பட்ட கவுரவம். A Colorful World குழுவில் பணியாற்றிய கலைஞர்களின் சார்பில் இந்த விருதை பெற்றிருக்கிறேன். இந்த நேரத்தில் விழா அமைப்பினருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.
ஷா முன்னர் இதே பிரிவின் கீழ் 'Falu's Bazaar' என்ற ஆல்பத்திற்காக 2018 ஆம் ஆண்டு கிராமி விருதில் நாமினேட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவர் இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திலும் பணிபுரிந்தவர் என்பது கூடுதல் தகவல்.
கர்ப்பமான வயிறுடன் நடிகை சோனம் கபூர் நடத்திய போட்டோஷூட்... செம வைரலான போட்டோஸ்!