டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில், தற்போது 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.
அரபிக்குத்துக்கு ஆடுன சேலையோடு Jolly O ஜிம்கானா பாட்டுக்கு குத்து டான்ஸ் ஆடிய அஞ்சு குரியன்!
இதுவரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் இருந்து, போட்டியாளர்களைத் தேர்வு செய்து, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில், வார இறுதி நாட்களில் நடிகர் சிம்பு கலந்து கொண்டு, போட்டியாளர்களிடம் உரையாடுவது வழக்கம்.
அந்த வாரம் ஃபுல்லா சண்டை தான்
அதிலும் குறிப்பாக, கடந்த வார இறுதியில் நடிகர் சிம்பு என்ட்ரி கொடுத்து, போட்டியாளர்களுடன் மேற்கொண்ட உரையாடல்கள், அதிக அளவில் வைரலாகி இருந்தது. இதற்கு மிக முக்கிய காரணம், அந்த வாரத்தில் போட்டியாளர்கள் மத்தியில் நடந்திருந்த சண்டை, சச்சரவுகள் தான். பாலா - நிரூப் மோதல், முட்டை டாஸ்க் விவகாரம் என வாரம் முழுவதும் அதிகம் சண்டைகள் தான் பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்திருந்தது.
தாமரையை தள்ளி விட்ட பாலா?
அதே போல, இந்த வாரமும் நடிகர் சிம்பு, பாலா குறித்து சொன்ன விஷயமும், அதற்கு தாமரை ரியாக்ட் செய்த விதமும் அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, பிக்பாஸ் வீட்டில் நிகழ்ந்த கொடி டாஸ்க்கின் போது, பாலா மற்றும் தாமரை ஆகியோர் ஆடிக் கொண்டிருந்தனர். அப்போது, இருவரும் கொடியை பிடித்து இழுக்க முயற்சி செய்ய, தாமரை கையில் இருந்த கொடியை வேகமாக பிடித்து இழுத்தார் பாலா.
எச்சரித்த சிம்பு
அப்போது, தாமரை பறந்து போய் கீழே விழுந்து விடுகிறார். அப்படியே ஒரு சுற்று சுற்றி, கீழே விழுகிறார் தாமரை. இதனை பற்றி பாலாவிடம் பேசிய சிம்பு, "அதனை வெளியே இருந்து பார்க்கும் போது, மிகவும் கடுமையாக உள்ளது. ஏற்கனவே, முட்டை டாஸ்க்கிலும் நீங்கள் இது போன்று தான் செயல்பட்டீர்கள். நான் ஏற்கனவே சொன்னதை மீண்டும் சொல்வது போல எனக்கு தோன்றுகிறது. இனி பார்த்து கவனமாக ஆடுங்கள்" என பாலாவுக்கு எச்சரிக்கை விடுத்தார் சிம்பு.
இதற்கு பதிலளித்த பாலா, "தாமரைக்கு அடிபட வேண்டும் என்ற எண்ணத்தில் நான் ஆடவில்லை. நான் கொடியை பிடித்து இழுக்க, அவர் யதார்த்தமாக போய் விழுந்து விட்டார். எனக்கே அது மிகவும் கஷ்டமாக இருந்தது" என தனது விளக்கத்தினை அளித்தார்.
ஆதரவாக வந்த தாமரை
அந்த நேரத்தில் யாரும் எதிர்பாராத வகையில், பாலாவுக்கு ஆதரவாக பேசிய தாமரை, "பாலா மீது எந்த தவறுமில்லை. நான் தான் கொடியை பலமாக பிடித்திருக்க வேண்டும். அது என்னுடைய தவறு தான். அவர் வேண்டுமென்றே என்னை வேதனைப்படுத்தவில்லை. நான் பல டாஸ்க்குகளில் நிறைய அடி வாங்கி உள்ளேன். டாஸ்க் ஆடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். இதனால், நான் அனைத்தையும் அப்போதே மறந்து விடுவேன்" என கூறினார்.
இறுதியில் பேசிய சிம்பு, "உங்களுக்குன்னு இல்லை. யாராக இருந்தாலும் ஆக்ரோஷமாக ஆட வேண்டாம் என்பது தான் எனது கருத்து. அதனால், இனிமேல் பார்த்து ஆடுங்கள்" என தெரிவித்தார்.
வயித்துல இருந்த குழந்தையை கூட திட்டுனாங்க.. உருகிய 'வெண்பா'.. அர்ச்சனா அம்மா சொன்ன 'ஹைலைட்'