மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு ஆகிய வெற்றி திரைப்படங்களுக்கு பிறகு நடிகர் சிலம்பரசன் நடிப்பில் அடுத்ததாக "பத்து தல" திரைப்படம் உருவாகி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners
இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் கிருஷ்ணா இயக்கி வருகிறார். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது.
இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குனர் கௌதம் மேனன், அனு சித்தாரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஸ்டுடியோ கிரீன் K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் எடிட்டராக பிரவீன் K L பணிபுரிகிறார். பத்து தல படத்தின் படப்பிடிப்பு ஐத்ராபாத், விசாகப்பட்டினம், பெல்லாரி, துங்கபத்திரை அணை, காரைக்குடி, கோவிலூர், கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் நடந்து நிறைவடைந்தது.
சிம்புவின் "பத்து தல"
மேலும், பத்து தல திரைப்படம் மார்ச் 30 ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பத்து தல படத்தின் முதல் சிங்கிளான "நம்ம சத்தம்" என்ற பாடல், கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதியன்று சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது.
Images are subject to © copyright to their respective owners
இதனைத் தொடர்ந்து, பத்து தல படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களையும் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில், பத்து தல படத்தின் டீசர், மார்ச் 03 ஆம் தேதியன்று, மாலை 05 : 31 மணிக்கு வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழுக்க தாடியுடன் ஒரு கேங்ஸ்டர் லுக்கில் சிம்பு பத்து தல படத்தில் இருப்பதால், இந்த படத்தின் டீசரையும் மிகுந்த ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், பத்து தல டீசரை பார்த்து விட்டு, நடிகர் சிம்பு பகிர்ந்துள்ள ட்வீட்டும், அதில் இசை அமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானை பாராட்டி உள்ள விஷயமும் அதிகம் வைரலாகி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners
பாய் சம்பவம்...
இது தொடர்பான சிம்புவின் ட்வீட்டில், "தற்போது தான் பத்து தல டீசர் பார்த்தேன். நம்ம பாய் (ஏ.ஆர். ரஹ்மான்) சம்பவத்திற்கு தயாராக இருங்கள் என்பதை மட்டும் தான் இப்போதைக்கு சொல்ல முடியும். தேங்க் யூ காட் பாதர்" என ஏ.ஆர். ரஹ்மானுக்கு நன்றி சொல்லி உள்ளார் சிம்பு. அவரது ட்வீட்டில் ஏ.ஆர். ரஹ்மானை பாராட்டி உள்ளதால் டீசரில் வரும் பின்னணி இசை சிறப்பாக வந்திருக்கிறது என்பதை தான் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.
Images are subject to © copyright to their respective owners
முன்னதாக விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, செக்கச் சிவந்த வானம், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட சிம்பு படங்களுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், பத்து தல படத்திற்கும் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், சிம்பு - ஏ.ஆர். ரஹ்மான் காம்போவில் உருவாகும் பாடல்களுக்கு பிரத்யேக ரசிகர்கள் கூட்டம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.