சிம்பு நடிப்பில், ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ள திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு’. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. வெந்து தணிந்தது காடு படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் 2 மணி நேரம் 53 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கௌதம் மேனனுடன் நான் கடவுள், அங்காடி தெரு, 2.O, பாபநாசம், சர்கார், இந்தியன்-2, பொன்னியன் செல்வன், விடுதலை உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதிய எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்காக முதல் முறையாக இணைந்துள்ளார்.
இந்த நிலையில் இந்த திரைப்பட செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆவதற்கு முன்பாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் குறித்த கலந்துரையாடல் ரசிகர்களுக்கு மத்தியில் நிகழ்ந்தது. இதில் பேசிய சிம்பு, “ரசிகர்கள் இதற்கு முன்பு போல் இல்லை, தற்போது விழிப்படைந்து விட்டனர். அவர்களை பொறுத்தவரையில் திரைப்படத்தில் நாங்கள் ஏதோ ஒன்றை புதிதாய முயற்சிக்கிறோம் என்ற நம்பிக்கை இருந்தால் போதும். படம் ஜெயிக்கிறது, இல்லை என்பதையும் தாண்டி, நாங்கள் கடின உழைப்பை கொடுக்க நினைத்தோம். கௌதம் மேனன் நினைத்திருந்தால் ஏ.ஆர்.ரஹ்மான் இசையை வைத்துக்கொண்டு ஒரு லவ் திரைப்படத்தை கொடுத்திருக்கலாம். அது மினிமம் கேரண்டியாவது கொடுத்திருக்கும்.
ஆனால் இப்படி புதிதாக ஒன்றை முயற்சித்து இருக்கிறார். அதற்காக நானும் உழைத்தேன். என்னை பொறுத்தவரை எல்லா படமும் கமர்சியலாக நடிக்கிறோம். இந்த படத்தில் கொஞ்சம் அதிலிருந்து விலகி நடிக்கலாம் என நினைத்தபோது இந்த ஸ்கிரிப்ட் அமைந்தது. அவ்வப்போது இப்படியான கதைக் களங்களிலும் நடிக்க வேண்டும் என்று தோன்றியது என்று குறிப்பிட்டார்.
மேலும் இந்த திரைப்படத்திற்கென்று, வெந்து தெரிந்தது காடு .. சிம்புக்கு வணக்கத்தை போடு! என்று முக்கிய ட்ரெண்டிங் வசனத்தை அடிக்கடி கூறி வந்த கூல் சுரேஷ் குறித்து பேசப்பட்ட போது, இது குறித்து சிம்புவும் பேசி இருந்தார். அதில் அவர், “நிச்சயமாக கூல் சுரேஷ்க்கு மிகப்பெரிய நன்றியை சொல்ல வேண்டும். ஏனென்றால் அவர் இந்த திரைப்படத்துக்கு வேற லெவல் ப்ரோமோஷன் பண்ணி விட்டார்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாக இருக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு வந்த கூல் சுரேஷ் படம் குறித்து பாராட்டி பேசியுள்ளார்.