இனிமேல் நடிப்பதில்லை என்று சிம்பு படத்தின் நடிகை திடீர் முடிவு எடுத்துள்ளார்.
சிம்பு நடிப்பில் உருவான சிலம்பாட்டம் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் சனா கான். இதை தொடர்ந்து இவர், தம்பிக்கு இந்த ஊரு, பயணம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதன் பிறகு, இவர் கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பதில் இருந்து ஒதிங்கி இருந்தார்.
இந்நிலையில் தற்போது சனா கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு திடீர் முடிவை எடுத்துள்ளார். இனிமேல் திரைப்படம் உள்ளிட்ட எவற்றிலும் நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார். இனி இறைவனின் ஆணைப்படி, தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டு வாழ்வது என முடிவெடுத்துள்ளாராம் இவர். அதுவே தனது பிறப்பிற்கான நோக்கம் என நினைக்கிறாராம் சனா கான்.
My happiest moment😊
May Allah help me n guide me in this journey.
Aap sab mujhe dua Mai Shamil rakhe🤲🏻#sanakhan #2020 #8thoct #thursday pic.twitter.com/8DIJJ2lCSC
— Sana Khaan (@sanaak21) October 8, 2020