Vels Film International தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், AR ரஹ்மான் இசையில், சிலம்பரசன் TR, ராதிகா, சித்தி இத்னானி மற்றும் பலர் நடித்து வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்தும், ரசிகர்கள் வரவேற்பில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
50 வது நாள் வெற்றிவிழா திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. சிம்பு இதில் மிகச்சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார். எவ்வளவோ மாறிட்ட சிம்பு.. எனக்கு முன்னாடி ஷூட்டிங் வந்திருக்கார்.
ஹோட்டலில் தங்கி இருக்கும்போது பார்த்தால் தியானம் பண்ணிகிட்டு இருக்கார். நாடு தாங்காதுய்யா என நினைத்தேன்.. (சிரிக்கிறார்). இந்த படத்துல என்ன சிம்பு பண்ணிருக்க.. மல்லிப்பூ பாடலில் சிம்பு ஆடுவது.. ப்பா.. அதை தியேட்டரில் பயங்கர சத்தத்துடன் முழுமையாக அனுபவிக்க முடியாததால் உடனே அடுத்த நாளே சிங்கப்பூர் போய் படம் பார்த்தேன். அங்கயும் சத்தம்தான். மக்கள் படத்தை எஞ்ஜாய் பண்ணினார்கள்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகள் ஜெயிக்கிறது என்பதில் சந்தோஷம். இந்த படத்தை பல தடைகளை தாண்டி உருவாக்கிய தயாரிப்பாளருக்கு எனது நன்றிகள். படக்குழு அனைவருக்கும், எனது வாழ்த்துகள்.” என தெரிவித்தார்.
Also Read | Vendhu Thanindhathu Kaadu: மைக் ஆன்ல இருப்பதை மறந்து சிம்புவிடம் புலம்பிய ராதிகா.. GVM அல்டிமேட் Thuglife.!