சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு.
இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் ஜூன் 21 வெளியாகும் என இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஏற்கனவே குறிப்பிட்டிருந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் மற்றும் பட ரிலீஸ்க்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இதனிடையே தமிழ்நாட்டில் சாலைகளில் பெண் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வேண்டாம் என புதிய உத்தரவினை டிஜிபி தமிழக அரசின் அறிவுறுத்தலின் பேரில் அறிவித்ததாக தகவல்கள் வெளியானது.
Good one. Very much appreciative for this decision.@sureshkamatchi pic.twitter.com/8fvKcxgk7v
— LIBRA Productions (@LIBRAProduc) June 13, 2021
இதனை அடுத்து மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கடந்த வருடம் இயக்கி வெளியிட்ட மிகமிக அவசரம் திரைப்படத்தின் தாக்கத்தை குறிப்பிட்டு இந்த செய்தியை பகிர்ந்து, நல்ல முன்னெடுப்பு.. இந்த முடிவுக்கு பாராட்டுகள் என இந்த அறிவிப்பு குறித்து தயாரிப்பாளர் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் தெரிவித்துள்ளார்.
இதே செய்தியை பகிர்ந்துள்ள மிகமிக அவசரம் படத்தின் இயக்குநரும் மாநாடு படத்தின் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி, “படைப்பு என்பது பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல, அதைத் தாண்டி சமூகத்தில் என்ன மாற்றத்தை உருவாக்குகிறது என்பது மிக முக்கியம்.
படைப்பு என்பது பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல, அதைத் தாண்டி சமூகத்தில் என்ன மாற்றத்தை உருவாக்குகிறது என்பது மிக முக்கியம். அந்த வகையில் "மிகமிக அவசரம்" படம் எடுத்தற்காக உண்மையாகவே பெருமைகொள்கிறேன். பாராவிலிருந்து விலக்களித்த முதல்வர் @mkstalin அவர்களுக்கும் டிஜிபி அவர்களுக்கும் tq pic.twitter.com/ATCd6qtWmR
— sureshkamatchi (@sureshkamatchi) June 13, 2021
அந்த வகையில் "மிகமிக அவசரம்" படம் எடுத்தற்காக உண்மையாகவே பெருமைகொள்கிறேன். பாராவிலிருந்து விலக்களித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் டிஜிபி அவர்களுக்கும் நன்றி!” என குறிப்பிட்டுள்ளார்.
இதனை அடுத்து சிம்புவின் ரசிகர்களும் மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியை பாராட்டி வருகின்றனர்.