பரிட்சையில் ஐந்து மார்க் கேள்விக்கு படத்தின் கதை - இயக்குநர் செம ஜாலி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சில்லுகருப்பட்டி படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம், தனது படத்தை பற்றிய சுவாரஸ்யமான விஷயத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஹலிதா ஷமீமின் சில்லுகருப்பட்டி ஸ்டோரி | sillukaruppatti director halitha shameem shares a pic of student wrote her movies story in exam

பூவரசம் பீப்பி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஹலிதா ஷமீம். இதையடுத்து இவர் இயக்கிய படம் சில்லுகருப்பட்டி. சமுத்திரக்கனி, சுனைனா, மணிகண்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. நான்கு வெவ்வேறு கதைகளை தொகுத்து உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் அவருக்கு பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

இந்நிலையில் ஹலிதா ஷமீம் தனது ட்விட்டர் பக்கத்தில் சுவாரஸ்யமான பதிவை வெளியிட்டுள்ளார். பரிட்சையில் சில்லுக்கருப்பட்டி படத்தை பற்றி 5 மார்க் கேள்விக்கு எழுதியிருப்பதை பதிவிட்டுள்ளார். BCA படிக்கும் மாணவர் ஒருவர், ஆங்கில தேர்வில் சமீபத்தில் பார்த்த திரைப்படத்தை பற்றிய கேள்விக்கு இந்த விடையை அளித்துள்ளாராம்.  மேலும் அதை கண்டு இயக்குநர் ஹலிதா ஜாலியாக சிரிப்பது போன்ற எமோஜியையும் இணைத்துள்ளார். ஹலிதா ஷமீம் தற்போது ஏலே எனும் படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor

ஹலிதா ஷமீமின் சில்லுகருப்பட்டி ஸ்டோரி | sillukaruppatti director halitha shameem shares a pic of student wrote her movies story in exam

People looking for online information on Halitha Shameem, Samuthirakani, Sillu Karupatti Tamil will find this news story useful.