COBRA M Logo Top
www.garudavega.com

எல்லாரும் நல்லா இருக்கனும்..பிள்ளையார்பட்டி கோயிலில் சாமி தரிசனம் செய்த சிம்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிலம்பரசன் TR.

Silambarasan TR Visit Pillaiyarpatti Karpaga Vinayagar Temple

Also Read | விஜய் - ராஷ்மிகா நடிக்கும் 'வாரிசு'.. அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போ? மெர்சலான அப்டேட்

கடந்த ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான 'மாநாடு' திரைப்படம், 100 கோடிக்கும் மேல்  வசூலித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தில் உடல் எடையை குறைத்து புதிய தோற்றத்தில் சிம்பு நடித்திருந்தார்.

மாநாட்டை தொடர்ந்து, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிம்பு நடித்துள்ள "வெந்து தணிந்தது காடு" திரைப்படம், செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. முன்னதாக, இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் சிங்கிள் ரிலீஸ் ஆகி ரசிகர்களை  கவர்ந்தந்திருந்தது.

Silambarasan TR Visit Pillaiyarpatti Karpaga Vinayagar Temple

வெந்து தணிந்தது காடு படத்தின் இசை  வெளியீட்டு விழா செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு நடக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்த விழா நடக்கும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

Silambarasan TR Visit Pillaiyarpatti Karpaga Vinayagar Temple

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

Silambarasan TR Visit Pillaiyarpatti Karpaga Vinayagar Temple

பத்து தல திரைப்படம் இந்த ஆண்டு, டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் சிம்பு, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Silambarasan TR Visit Pillaiyarpatti Karpaga Vinayagar Temple

முகக்கவசம் அணிந்த நிலையில் நடிகர் சிம்பு, கோயிலின் கிழக்கு வாயிலை நோக்கி செல்லும் புகைப்படங்களாக அவை அமைந்துள்ளன.

மிகப்பெரிய பழமையான இந்த கோவில் குடைவறைக்கோவில் ஆகும். 1600 ஆண்டுகள் பழமையான இக்கோவில் மகேந்திர பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. தற்போது நகரத்தார்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

Also Read | 'விடுதலை' படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய பிரபல நடிகர் & தயாரிப்பாளர்.. போடு வெடிய

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Silambarasan TR Visit Pillaiyarpatti Karpaga Vinayagar Temple

People looking for online information on Pillaiyarpatti Karpaga Vinayagar Temple, Silambarasan TR, Silambarasan TR Visit Pillaiyarpatti Karpaga Vinayagar will find this news story useful.