நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது வைரல் ஆகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, பாரதிராஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஈஸ்வரன் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படமும் பொங்கல் பண்டிகைக்கு நேரடியாக தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நடிகர் சிம்பு தற்போது ஒரு அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தியேட்டர்கள் திறக்கும் வரை, மாஸ்டர் திரைப்படத்தை ரிலீஸ் செய்யாமல் காத்திருந்த நடிகர் விஜய்யின் முடிவை பாராட்டி அவர் நன்றி தெரிவித்துள்ளார். அதுவே ''தன்னை உருவாக்கிய மீடியமிற்கு செய்யும் மரியாதை'' என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் திரையரங்குகள் முழுமையாக திறக்கபட வேண்டும், 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி தந்து, திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க விரைவில் உத்தரவிடுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
#Master #Eeswaran #SpreadLove 🙏🏻 pic.twitter.com/g6SOq1a1uE
— Silambarasan TR (@SilambarasanTR_) January 4, 2021