சென்னை 04, பிப்ரவரி 2022:- நடிகர் சிம்பு எவ்வாறு உடல் எடையை குறைத்தார் என்பது குறித்த மேக்கிங் வீடியோ ஷூட் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் சிம்பு
கடந்த பொங்கல் சமயத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தில் உடலை குறைத்து புதிய தோற்றத்தில் தோன்றியிருந்த நடிகர் சிம்பு, அதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்திருந்தார். பெரும் வரவேற்பை பெற்று 50 நாட்கள் கடந்து இந்த திரைப்படம் ஓடியது.
மாநாடு
வெங்கட் பிரபு இயக்கத்திலான இந்த திரைப்படம் அதன் திரைக்கதை நேர்த்தி, பிரவீன் கே.எல் எடிட்டிங் உள்ளிட்ட அம்சங்களால் இன்னும் பாராட்டி பேசப்பட்டது. எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திரசேகர், எஸ்.ஏ.சந்திரசேகர் என பல முன்னணி சீனியர் நடிகர்கள் சிம்புவுடன் இணைந்து இந்த படத்தில் கலக்கினர். யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்துக்கு பலம் சேர்த்திருந்தது.
அடுத்தடுத்த திரைப்படங்கள்..
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே பத்து தல, கொரோனா குமாரு உள்ளிட்ட படங்களிலும் சிம்பு நடித்து வருகிறார். இந்நிலையில் தான் நடிகர் சிம்பு எவ்வாறு உடல் எடையை குறைத்தார் என்பது குறித்த 13 நிமிட வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
அட்மேன்..
அட்மேன் என்கிற தலைப்பில் வெளியான இந்த வீடியோவில் நடிகர் சிம்பு, தான் எடையை குறைக்க தொடங்கிய முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரையிலும் அவரது கடின உழைப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எஸ்.டி.ஆர் பருமன் ஆகிவிட்டார், இனியெல்லாம் அவர் குறைத்து சினிமாவில் நடித்து.. என்று வைத்து பேசியவர்களும், என்ன இப்ப? குண்டு உடலை குறைத்து ஒல்லியாகிவிட்டார் அவ்வளவுதானே? என்று தட்டையாக பேசியவர்களும் கூட ஆச்சரியப்படும் அளவுக்கு இந்த வீடியோ விழிபெருக்கச் செய்துள்ளது.
கலங்க வைக்கும் வீடியோ
அதிகாலை ஜாக்கிங், நீச்சல், குத்துச் சண்டை, நடனம், கடுமையான உடற்பயிற்சி, யோகா நடிகர் சிம்பு அர்ப்பணிப்புடன் தான் இப்போதைய லுக்கை அடைந்திருக்கிறார் என்பதை இந்த வீடியோ தற்போது பறைசாற்றுகிறது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே வேகமாக வைரலாகி வருகிறது. நிவாஸ் பிரசன்னா இந்த வீடியோவுக்கு இசையமைத்திருக்கிறார். அந்தோணி எடிட்டிங் செய்துள்ளார்.
‘105’ கிலோவாக இருந்து தற்போது உடல் எடையை குறைத்துள்ளதைப்பற்றி உருக்கமாக பேசிய சிம்பு, “அமேசிங், மைண்ட் ப்ளோயிங் அனுபவம்.. ” என்று எமோஷனலாக குறிப்பிட்டுள்ளார்.