சென்னை: பிக்பாஸ் அல்டிமேட்டில் நடிகர் சிம்பு போட்டியாளர்களுடன் கோபப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த ஜனவரி 30ஆம் தேதி முதல் டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 14 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அவர்களில் சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, அபினய், ஷாரிக் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். வனிதா தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டதாக கூறி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
கமல்ஹாசன் விக்ரம் பட ஷூட்டிங் காரணமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக விலகியதால் சிம்பு தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். வெளியேற்றப்பட்ட செய்யப்பட்ட சுரேஷ் சக்கரவர்த்தியும், விஜய் டிவி காமெடியன் சதீஷும் வைல்டு கார்டு மூலம் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிற சீசன்களை போலவே, ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கும் அதிக வரவேற்புள்ளது. இந்த வாரத்தில் கிராமத்து காதாபாத்திரங்கள், பிராது விதிமுறைகள் மற்றும் கிராம செட்அப் என ஒட்டு மொத்த பிக்பாஸ் செட்டும் கிராமத்து பின்னணியில் அமைந்திருந்தது. இதில், பிக்பாஸ் போட்டியாளர்கள் இரண்டு குடும்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். அதே போல, பிக்பாஸ் வீடும் ஏழு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, வேலி போடப்பட்டிருந்தது.
இரண்டு தலைக்கட்டு குடும்பங்களில் ஒன்று சினேகனின் குடும்பம். மற்றொன்று பாலாஜியுடையது. இதில் சினேகனுடைய மனைவியாக அனிதாவும், பாலாஜியின் மனைவியாக தாமரையும் வருகின்றனர். மற்ற போட்டியாளர்களும் இரு குடும்பத்தில் சில கதாபாத்திரங்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். அதில், ஊரின் கிழவியாக வருபவர் ஜூலி.
இந்த டாஸ்கில் ஒரு சில போட்டியாளர்கள் மட்டுமே கொடுத்த கதாபாத்திரத்தை செவ்வனே செய்தனர். சிலர் விருப்பமில்லாமல் கொடுத்த கதாபாத்திரங்களை செய்தனர். இது சிம்புவை கோபமடைய வைத்தது. இதனால் ஹவுஸ் மேட் மீது சிம்பு பாய்ந்தார்.
சிம்பு பேசியது, "என்ன ஆச்சு... எல்லாமே சீசண்ட் ப்ளேயர்ஸ். எல்லாமே உங்களுக்கு தெரியுது. யாருமே இல்லேனு மறுக்க முடியாது. டாஸ்க டாஸ்க்கா பண்ண வேண்டியதுதானே.. அதுல உங்களுக்கு என்ன டிஸ்டர்ப் ஆச்சு? வெளியில இருந்து ஆடியன்ஸ் பாக்குறாங்கங்குற ஃபீலே உங்களுக்கு இல்ல. எல்லாரும் ஒன்னை புரிஞ்சுக்க மாட்றீங்க.. நாங்க பாத்துட்டு இருக்கோம். மக்கள் தான் ஓட்டு போட்றாங்க.. நீங்க அந்த மக்களுக்கு மரியாதை கொடுங்க.ஆடியன்சுக்கு மரியாதை கொடுங்க. பாக்குறவங்க முட்டாள் கிடையாது” என சிம்பு கொந்தளித்தார்.