சூர்யா பிலிம் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பாக திரு.மகேஷ்வரன் நந்தகோபால் தயாரிப்பில் தமிழ் மற்றும் மலையாளத்தில் கிரைம் திரில்லராக உருவாகியிருக்கும் படம் 'சிட்தி' ( SIDDY ). இப்படத்தில் முக்கிய வேடத்தில் I. M. விஜயன், ராஜேஷ் சர்மா, ஹரி கிருஷ்ணன், சிஜீ லால், வேணு மரியாபுரம், சொப்னா பிள்ளை, மதுவிருத்தி, திவ்யா கோபிநாத், தனுஜா கார்த்தி ஆகியோர் நடித்துள்ளார்கள்.
புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம்.. அல்லு அர்ஜூன் பிறந்தநாளில் வெளியான சூப்பர் அப்டேட்
இப்படத்துக்கு கார்த்திக் S. நாயர் ஒளிப்பதிவு செய்ய, ரமேஷ் நாராயணன் இசையமைக்கிறார். சீனிவாச மூர்த்தி வசனம் எழுத, சினேகன், மலர் வண்ணன் பாடல்களை எழுதுகின்றனர். அஜித் உன்னிகிருஷ்ணன் எடிட்டிங் செய்கிறார், சாமி பிள்ளை நடனம் அமைக்கிறார், பவன் சங்கர் ஸ்டண்ட் அமைக்கிறார். பயஸ் ராஜ் (Pious Raj) இப்படத்தை எழுதி இயக்குகிறார்.
கதை என்ன?
சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவன் " சிட்தி " தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கொலையாளியாக மாறுகிறார். அவர் ஏன் கொலையாளியாக மாறினார் ? இறுதியில் என்ன நடந்தது ? என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியுள்ளார்கள்.
இசை விழா
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, இப்படம் விரைவில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தமிழ் பதிப்பின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் இனிதே நடைபெற்றது.
இவ்விழாவினில் தயாரிப்பாளர் திரு.மகேஷ்வரன் நந்தகோபால் பேசியது…சிறப்பு விருந்தினர் அனைவருக்கும் நன்றி. சூர்யா பிலிம் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் முதல் படம் சிட்தி. இது ஒரு கூலான திரில்லர் படமாக இருக்கும். புதுமையான படமாக இருக்கும் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
இயக்குநர் பயஸ் ராஜ் பேசியதாவது…
இந்தப்படம் மிக சிறந்த திரில் அனுபவமாக இருக்கும். இசையமைப்பாளர் மிக சிறப்பான இசையை தந்திருக்கிறார். இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகர் ஆரி பேசியதாவது…
நான் உள்ளே வரும் போதே யாரார் வந்திருக்கிறார்கள் என கேட்டேன் ராஜன் சார், உதயகுமார் சார் வந்திருக்கிறார்கள் என்றார்கள், அப்போ நான் போய்விடுகிறேன் அவர்களே எல்லாவற்றையும் பேசிவிடுவார்கள் என்றேன். சின்ன பட்ஜெட் படங்களுக்கு யாரும் உதவாத போது, அப்படத்திற்கு ஜாமின் தரும் முதல் ஆட்களாக அண்ணன் ராஜன் அவர்கள் இருக்கிறார்கள். அண்ணன் ஏன் எல்லா பிரச்சனையும் பேசுகிறார் என்றால் அவருக்கு அவ்வளவு பிரச்சனை இருக்கிறது. அண்ணனும் நானும் பேசிக்கொண்டிருக்கும் போது ஒன்று ஞாபகம் வந்தது. நலிந்த தயாரிப்பாளர்களுக்கு என்னால் என்ன செய்ய முடியும், ஒரு நலிந்த தயாரிப்பாளரை காட்டுங்கள் ஒரு ரூபாய் பணம் வாங்காமல் நான் நடித்து தருகிறேன். இதே உதவியை நான் நடிகர் சங்கத்திற்கும் செய்ய தயாராக இருக்கிறேன். இந்த இயக்குனரும் நானும் சேர்ந்து ஒரு படம் செய்வதாக இருந்தது நீங்கள் கேஜிஎஃப் ரசிகராக இருந்தாலும் ஓகே பீஸ்ட் ரசிகராக இருந்தாலும் ஓகே ஆனால் படத்தை தியேட்டரில் வந்து பாருங்கள். இந்தப்படம் டிரெய்லரே தரமாக இருக்கிறது. அதில் உழைப்பு தெரிகிறது. தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது..
தயாரிப்பாளர் எனக்கு அறிமுகமானது, மனோகரி படத்தின் மூலமாக தான். அப்பொழுது அவர் கூறியது, மலையாளத்தில் நான் ஒரு படம் முடித்துள்ளேன், ஒரு தமிழனாக நான் தமிழில் முதல் படம் வெளியாக வேண்டும் என நினைக்கிறேன். மலையாள திரையுலகம் மிகபெரிய திரையுலகமாக இருக்கும் போது, அவர் தமிழ் மேல் கொண்ட ஈர்ப்பு அளப்பறியது. அவர் இந்த படத்தை தமிழில் வெளியிட வேண்டும் என்று விரும்பினார். இயக்குநருடன் நான் பேசிய வார்தைகள் குறைவு தான். பின்னர் இசையமைப்பாளர் பற்றி கூறிய போது, அவர் ஒரு மெலடி கிங் என கூறினார். அவர் சிறப்பாக வேலை செய்துள்ளார். மொத்த குழுவும் அயராத உழைப்பை தந்துள்ளனர். படத்தின் நிகழ்வை சென்னையில் வைக்கும் போது, யாரையாவது அழைக்கலாம் என்றபோது ராஜன் சாரை அழையுங்கள், உதயகுமார் சாரை அழையுங்கள் என்றேன். எல்லா நிகழ்வுகளுக்கும் இருவரும் வருகிறார்கள் என்ற சோர்வு பத்திரிக்கையாளருக்கு இருக்கும். சினிமாவில் யாரும் தோற்றுவிட கூடாது என நினைப்பவர்கள் அவர்கள். அவர்கள் அருகில் அமர்வது எனக்கு மகிழ்ச்சி. படத்தின் ஒளிப்பதிவு மிகவும் கடினமானது. கடலில் எடுத்த காட்சிகள் மிகவும் கடினமாது. தயாரிப்பாளரிடம் நான் ஓடிடிக்கு போகலாம் என கூறிய போது, அவர் தியேட்டர் தான் என்று உறுதியுடன் கூறினார். காரணம் அவர் இயக்குனராக வேண்டும் என சென்னை வந்தவர். அதனால் நான் சாதிக்க முடியாததை நிகழ்த்தி காட்ட, தயாரிப்பாளராக மாறியவர். படம் கண்டிப்பாக வெற்றி பெறும். வாழ்த்துக்கள் நன்றி.
அசோக் செல்வன் நடித்த புதிய திரைப்படம்.. பிரபல TV சேனலில் ஒளிபரப்பு! எப்போ? எதுல?