நடிகை சித்தி இத்னானி தமிழகத்தில் உள்ள மலை வாசஸ்தலத்திற்கு சென்றுள்ளார்.
Also Read | "துணிவு.. ரொம்ப ஸ்பெஷலான படம்".. ட்வீட் செய்த ஜிப்ரான்! கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்
சிம்பு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் வெந்து தணிந்தது காடு. வெந்து தணிந்தது காடு படம் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இந்த படம் பெற்றது குறிப்பிடத்தக்கது. வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்தார்.
தென் மாவட்டத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளியாக மும்பைக்கு செல்லும் முத்து வீரனின் (சிம்பு) வாழ்க்கை சம்பவங்களே "வெந்து தணிந்தது காடு" படமாகும். இந்த படத்தில் பாவை எனும் கதாபாத்திரத்தில் சித்தி இத்னானி நடித்திருந்தார்.
இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பலருடைய கவனத்தை ஈர்த்த சித்தி இத்னானி, அடுத்ததாக ஆர்யாவுக்கு ஜோடியாக புதிய படத்திலும், ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக 100 கோடி வானவில் படத்திலும் சித்தி இத்னானி நடித்துள்ளார்.
குஜராத்தி, தெலுங்கு மொழிகளிலும் சித்தி இத்னானி நடித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலையில் சுற்றுலா சென்றுள்ள சித்தி இத்னானி, தனது சுற்றுலா வீடியோ & புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். கொடைக்கானல் டைரிஸ் என தலைப்பிட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Also Read | அந்த டான்ஸ் தான் அள்ளுது.. கச்சா பாதாம் பாட்டுக்கு நடனமாடிய வடிவேலு! செம்ம வீடியோ