சித்தார்த் கோபம் - ''அசிங்கமா இருக்கு, கடவுள் தான் காப்பாத்தணும்''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சித்தார்த், 'சிவப்பு மஞ்சள் பச்சை' , 'அருவம்' படங்களுக்கு பிறகு ஹீரோவாக நடித்திருக்கும் படம் 'டக்கர்'. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Siddharth tweets about fans and Twitter Trending in Telugu

இந்த படத்தை கப்பல் பட இயக்குநர் கார்த்தி ஜி.கிருஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சித்தார்த்திற்கு ஜோடியாக 'மஜிலி' படத்தில் நடித்த திவ்யான்ஷா கௌசிக் நடித்துள்ளார். இந்த படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் அபிமன்யூ சிங், யோகி பாபு, முனீஷ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் மற்றும் ஜெயராம் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்துக்கு வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், FakeKabaapAlluArjun மற்றும் FakeqweenMaheshbabu ஆகிய இரண்டு ஹேஷ்டேக்குகள் தெலுங்கு ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. லட்சக்கணக்கான ட்வீட்ஸ். கடவுள் நம் சினிமாவை காப்பாற்ற வேண்டும், அசிங்கமாக இருக்கிறது. என்று குறிப்பிட்டுள்ளார்.

Entertainment sub editor

Siddharth tweets about fans and Twitter Trending in Telugu

People looking for online information on Siddharth, Twitter Trending will find this news story useful.