மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்து இயக்குனர் ஷங்கர் மூலம் 'பாய்ஸ்' படத்தில் நாயகனாக அறிமுகமானவர் சித்தார்த். அதன் பிறகு தெலுங்கிலும் பல படங்களில் நடித்தார். அதில் 'நூவொஸ்தாவன்டே நேநொத்தன்டானா, பொம்மரிலு,' உள்ளிட்ட சில படங்கள் அவருக்கு பெரிய பெயரைப் பெற்றுத் தந்தன.
2013ல் வெளிவந்த 'ஜபர்தஸ்த்' படத்திற்குப் பிறகு அவர் நேரடித் தெலுங்குப் படத்தில் நடிக்கவில்லை.
இப்போது அவர் சமுக வலைதளத்தில் தெலுங்கு ரசிகர்களுக்கு ஒரு உறுதியைத் தந்துள்ளார். மீண்டும் தெலுங்கு ரசிகர்களைக் கவரும் விதத்தில் ஒரு முயற்சியில் இருக்கிறேன். 18 மாதங்கள் நேரம் தாருங்கள். உங்களை கட்டாயம் ஏமாற்ற மாட்டேன். கடின உழைப்பும், ஒரு அற்புதமான கதையும் வந்து கொண்டிருக்கிறது,” என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Evadu emanna nenu thirugi osthanu le. Please note this promise down...i will at the very least try my best to please my #Telugu audience once again. Give me 18 months prayakshakulaara. I will not let you down. Lot of hard work and great content on the way. Maatladkundhaam ❤️
— Siddharth (@Actor_Siddharth) May 1, 2019