Sai Pallavi: தென்னிந்தியா முழுவதும் பிரபலமான பிரேமம் திரைப்படத்தின் மூலம் அனைவரிடையே பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி.
ரவுடி பேபி..
அதன் பின்னர் தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷூடன் இணைந்து நடிகை சாய் பல்லவி நடித்த மாரி திரைப்படத்தின் 2-ஆம் பாகம் அவரை இன்னும் தமிழ் ரசிகர்களிடையே நெருக்கமாக்கியது. குறிப்பாக இந்த திரைப்படத்தில் இடம் பெறும் ரவுடி பேபி திரைப்படத்தில் சாய் பல்லவி ஆடியிருக்கும் டான்ஸ் வேற லெவலில் இருக்கும். அந்த படத்திலும் அராத்தி ஆனந்தியாக கலக்கியிருப்பார்.
லவ் ஸ்டோரி நாயகி..
இதனைத் தொடர்ந்து அண்மையில் நாக சைதன்யாவுடன் இணைந்து லவ் ஸ்டோரி எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படமும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
குறிப்பாக இந்த திரைப்படத்திலும் நடிகை சாய் பல்லவி டான்ஸில் பிச்சு உதறியிருப்பார். அவர் இந்த படத்தில் ஏற்றிருந்த கதாபாத்திரத்துக்குள் டான்ஸ் ஆடும் திறமை இருப்பதாகவும் காட்டப்பட்டிருக்கும். அதற்கு நியாயம் சேர்த்திருப்பார் சாய் பல்லவி.
ஷியாம் சிங்கா ராய்
தவிர தமிழில் கரு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த சாய் பல்லவி, அண்மையில் தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கும் 'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிப்பில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வெளியான “ஷியாம் சிங்கா ராய்” திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார்.
Niharika Entertainment சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி தயாரித்த இப்படத்தை, இயக்குனர் ராகுல் சங்கிரித்யன் இயக்கியிருந்தார். மறுபிறவியை மையமாக கொண்டு உருவான, இப்படத்தில், நானி இரண்டு வேடங்களில் நடித்திருப்பார். கீர்த்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன், சமுத்திரகனி நடித்துள்ள இப்படத்தில் சாய்பல்லவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Also Read: "மன அழுத்தமா இருக்கு அண்ணா!".. ரசிகரின் பதிவுக்கு ஜீ.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி பதில்!
“ஷியாம் சிங்கா ராய்” படம் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்கில் வெளியானது. முன்னதாக இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா, நானி, சமுத்திரகனி, சாய் பல்லவி, தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி உட்பட படக்குழுவினர் கலந்து கொள்ள பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
எனக்கு விஷூவல் தமிழில் தான் தெரியும்..
அதில் பேசியிருந்த நடிகை சாய் பல்லவி, “எப்போதுமே நான் ஒரு கதையை படிக்கும்போது, மனதில் விஷுவல் தமிழில் தான் தெரியும், தமிழகத்தில் பிறந்து வளர்ந்ததால் அப்படி இருக்கலாம். பலதடவை இந்த கதைகள் தமிழில் வந்தால் நன்றாக இருக்கும் என்று தோணும், இந்த படக்கதை படிக்கும்போது, நம் மொழியில் எடுக்கலாமே என தோன்றியது.
அப்போது தயாரிப்பாளர் நாலு மொழியில் எடுப்பதாக சொன்னார் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. தமிழ் படம் பார்க்கும் உணர்வை இந்த படம் தரும். இப்படத்தில் தேவதாசி பற்றி தெரிந்து கொள்வதற்காக, சில விஷயங்கள் கேட்டு தெரிந்து கொண்டேன், இயக்குநர் குழுவும் ஆராய்ச்சி செய்துள்ளார்கள், படத்திற்கு தேவையானதை செய்துள்ளோம். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஹலோ சொல்ட்டாங்களே..
இந்த திரைப்படம் தற்போது நெட்ஃபிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகிறது. இதனையொட்டி சாய் பல்லவியின் ஃபோட்டோவை பகிர்ந்த நெட்ஃபிளிக்ஸ் இந்தியா, தமது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குட் மார்னிங் சொல்லியிருந்தது. அதற்கு நடிகை சாய் பல்லவியும்,‘ஓ.. ஹலோ..’ என பதில் அளித்துள்ளார்.
இதற்குத்தான் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கத் தொடங்கியுள்ளது நம் நெட்ஃபிளிக்ஸ். முழுமையாக ஒரு ரசிகராகவே மாறி நெட்ஃபிளிக்ஸ் இவ்வாறு பதில் சொல்லியிருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை எற்படுத்தியுள்ளது.