Viruman Mobiile Logo top
www.garudavega.com

ஆஸ்கார் விருது பரிந்துரைப் போட்டியில் நானி & சாய் பல்லவி நடித்த ஷ்யாம் ஷிங்கா ராய்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நானி, ராகுல் சாங்க்ரித்யன், நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்டின் "ஷ்யாம் ஷிங்கா ராய்" திரைப்படம்  3 பிரிவுகளில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைப் போட்டியில் இடம் பெற்றுள்ளது.

Shyam Singha Roy For Oscar Nominations In 3 Categories

Also Read | ராக்கெட்ரி படம் லாபமா? மாதவன் வீட்டை இழந்துட்டாரா? வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்த மாதவன்!

நேச்சுரல் ஸ்டார் நானியின் காவிய காதல் கதையான ஷ்யாம் ஷிங்கா ராய், கோவிட் 19 சூழலில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இயக்குனர் ராகுல் இந்த படத்தை இயக்கினார்,  வெங்கட் போயனபள்ளி இதை நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்டின் கீழ் அதிக பட்ஜெட்டில் தயாரித்தார். ஷ்யாம் ஷிங்கா ராய் அதன் வெளியீட்டிற்குப் பிறகு  நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, மேலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலை வாரிக் குவித்தது. 

Shyam Singha Roy For Oscar Nominations In 3 Categories

பின்னர் OTT தளமான Netflix இல் திரையிடப்பட்டது. Netflix இல் அதிக மதிப்பீட்டைப் பெற்றது,  10 வாரங்களுக்கு அதிக நபர்கள் பார்க்கும் படமாக டிரெண்டில் இருந்தது.

இப்போது, ​​ஷ்யாம் ஷிங்கா ராய் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை போட்டியில் மூன்று பிரிவுகளில் போட்டியிட உள்ளது.

Shyam Singha Roy For Oscar Nominations In 3 Categories

பீரியட் கால திரைப்படம், பின்னணி இசை மற்றும் பாரம்பரிய கலாச்சார நடனம் உள்ள சுயாதீன படம் ஆகிய (periodic film, background score and classical cultural dance Indie film) மூன்று பிரிவுகளில் போட்டியிட உள்ளது.

Shyam Singha Roy For Oscar Nominations In 3 Categories

இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை மிக்கி ஜே மேயர் வழங்கியுள்ளார். இப்படத்தில் சாய் பல்லவி, கிருத்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் மற்றும் ராகுல் ரவீந்திரன் ஆகியோர் மற்ற முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Also Read | 'விருமன்' படத்தின் வெற்றி.. கார்த்தி & சூர்யாவுக்கு வைர Bracelet-ஐ பரிசளித்த வினியோகஸ்தர்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Shyam Singha Roy For Oscar Nominations In 3 Categories

People looking for online information on Krithi Shetty, Nani, Sai Pallavi, Shyam Singha Roy, Shyam Singha Roy For Oscar Nominations will find this news story useful.