www.garudavega.com
iTechUS

"நான் இருக்குற மாதிரியே என்ன நேசிச்சு".. கணவரை நினைத்து மனம் உருகிய ஸ்ருதிகா.. காரணம் என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் நிகழ்ச்சியை போலவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஹிட்டடித்த ரியாலிட்டி ஷோ என்றால் நிச்சயம் குக் வித் கோமாளியை சொல்லலாம்.

Shrutika insta post on her wedding anniversary gone viral

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி ஷோ பார்க்கப்படும் நிலையில், இதன் சிறப்பம்சமாக இருப்பதே சீரியஸான விஷயமாக இருக்கும் சமையலை மிகவும் வித்தியாசமாக பொழுதுபோக்கு மற்றும் விறுவிறுப்பு அம்சங்களுடன் காண்பிப்பது தான்.

இந்த நிகழ்ச்சியின் நடுவர்காளாக பிரபல செஃப்கள் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் மிகவும் அரட்டை அடித்து அனைவரையும் கலாய்த்து கொண்டே இருப்பதால் நிகழ்ச்சி இன்னும் சுவாரஸ்யமாகவும் செல்கிறது. இதுவரை 3 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து, 4 ஆவது குக் வித் கோமாளி சீசனும் விரைவில் ஆரம்பமாக உள்ளது.

முன்னதாக அஸ்வின், புகழ், பவித்ரா, சிவாங்கி, குரேஷி, சூப்பர் சிங்கர் பரத், KPY சரத் , மணிமேகலை, சுனிதா, KPY பாலா உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்தனர். இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் வனிதா வெற்றி பெற்றார். 2வது சீசனில் கனி வெற்றி பெற்றார். 3வது சீசனில் ரோஷினி ஹரிபிரியன், வித்யூலேகா, ஸ்ருதிகா மற்றும் பலர் சமையல் செய்பவர்களாக கலந்துகொண்டனர். இவர்களுள் ஸ்ருதிகா வெற்றி பெற்றார்.

Shrutika insta post on her wedding anniversary gone viral

3 ஆவது சீசன் ஆரம்பத்தில் இருந்தே தனது சமையல் மற்றும் துறுதுறுவென செட்டில் வலம் வந்ததன் மூலம் பலரையும் வெகுவாக கவர்ந்திருந்தார் ஸ்ருதிகா. ஒரு குழந்தையை போல, சிரித்த முகத்துடனே வலம் வந்த ஸ்ருதிகா, குக் வித்  கோமாளி நிகழ்ச்சியை சார்ந்த பலரின் ஃபேவரைட் ஆகவும் இருந்தார். தொடர்ந்து அவர் டைட்டில் வின்னர் ஆகவும் மாறியதையடுத்து சமூக வலைத்தளங்களிலும் அதிகம் ஆக்டிவாக ஸ்ருதிகா இருந்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது தனது திருமண நாளை குறிப்பிட்டு கல்யாண ஃபோட்டோவை ஸ்ருதிகா பகிர்ந்துள்ளார். ஸ்ருதிகாவின் கணவர் அர்ஜுன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வந்திருந்த போது அவர் ஜாலியாக அங்கே வலம் வந்தது பலரையும் கவர்ந்திருந்தது.

Shrutika insta post on her wedding anniversary gone viral

இதனிடையே, தற்போது திருமண நாளை முன்னிட்டு, கல்யாணத்தன்று எடுத்த புகைப்படத்தையும் ஸ்ருதிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, "இத்தனை வருடங்களில் என்னுள் சிறந்ததை மட்டும் வெளிக் கொண்டு வந்தவருக்கு... நான் இருப்பது போலவே என்னை நேசித்து, நான் செய்யும் அனைத்திலும் எனக்கான தன்னம்பிக்கையையும் தருகிறார்.

என் முதுகெலும்பு, என்னுடைய ஆதரவு மற்றும் வலிமையின் உண்மையான தூண். இந்த நாள் கடவுள் என்னை இந்த மனிதருடன் சேர்ந்து ஆசீர்வதித்தார். மேலும் அவர் கொடுத்த வாக்குறுதிக்கு உண்மையாக வாழ்கிறார்" என மனமுருகி தனது கணவர் குறித்து திருமண நாளில் ஸ்ருதிகா குறிப்பிட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Shrutika insta post on her wedding anniversary gone viral

People looking for online information on Cook with comali, Shrutika Arjun will find this news story useful.