www.garudavega.com

‘பொண்ணுங்களுக்கு LIMITATIONS இருக்கணுமா?’ - ஹை ஹீல்ஸ் செருப்பால ஸ்ருதி செஞ்ச சம்பவம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் ஸ்ருதிஹாசன். முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடைசியாக தமிழில் 'லாபம்' திரைப்படம் வெளியானது.

Shruthi Hassan reaction on women limitations in fans meet

அடுத்ததாக ஸ்ருதிஹாசன் பிரபாஸுடன் இணைந்து 'சலார்'  படத்தில் நடிக்கிறார். பான் இந்தியத் திரைப்படமான இந்த படத்தை கேஜிஎப் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். இந்த படம் செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிப்பதுடன் பாடல் பாடுவது, நடனம் என பல்வேறு திறன்கள் கொண்ட நடிகை ஸ்ருதிஹாசன் தனி ஆல்பம் பாடல்களும் பாடியுள்ளார். ஜனவரி 17 ஆம் தேதி டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ஸ்ருதிஹாசனுக்கு பவர் காரிடார்ஸ் (பிசி) இந்திய சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் பொழுதுபோக்கு துறையில் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ள ஸ்ருதிஹாசன், பிஹைண்ட்வுட்ஸ் சார்பில் நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பில் பங்கு பெற்றார். இதில் நடிகை ஸ்ருதிஹாசன் கேள்விகள், உரையாடல்கள், மற்றும் சுவாரஸ்ய ரவுண்டுகள் என பல்வேறு அத்தியாயமாக நடந்த நிகழ்வுகளில் பங்கேற்றார். அதன் ஒரு சிறு அத்தியாயமாக அவரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர் காட்டமான பதிலுடன் அதற்கேற்றாற்போல் அங்குள்ள பலூன் ஒன்றை உடைத்து காட்டலாம்.

அதன்படி சில கேள்விகளுக்கு கைகளால் பலூனை உடைத்த நடிகை ஸ்ருதிஹாசன், தன்னுடைய ஹேட்டர்களுக்காக பலூன் உடைத்து அதற்கான ஆற்றலை விரையும் செய்ய விரும்பவில்லை என்று கூறினார். இதேபோல், “பெண்கள் என்றால் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்கிற கருத்துக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்கப்பட்ட போது அதற்கு ஸ்ருதிஹாசன், “இதற்கு ஹை ஹீல்ஸால் பலூனை காலால் அழுத்தி உடைக்க வேண்டும் என்று தோன்றுகிறது” என்று கூற, அப்போது VJ ஷோபனா,  ‘அப்படியே செய்யுங்கள்’ என்று கூறுகிறார்.

அதன்படி ஸ்ருதிஹாசனோ, தன் ஹை ஹீல்ஸ் செருப்பு போட்ட காலால் அங்குள்ள ஒரு பலூனை உடைத்தார். மேலும் தன்னுடைய ஆடை சுதந்திரம் குறித்து பேசிய ஸ்ருதிஹாசன், “அது அவரவருக்கு உண்டானது. லீகலாக இருக்கும் வரையில் தனிமனித சுதந்திரத்திற்கு உட்பட்டது தான் ஆடை சுதந்திரம்” என்று பதிலடி கொடுத்திருந்தார்.

‘பொண்ணுங்களுக்கு LIMITATIONS இருக்கணுமா?’ - ஹை ஹீல்ஸ் செருப்பால ஸ்ருதி செஞ்ச சம்பவம்! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Shruthi Hassan reaction on women limitations in fans meet

People looking for online information on Shruthi Haasan, Shruthi Haasan fans meet Behindwoods, Shruthi Haasan Interview, Shruthi Haasan Interview Behindwoods will find this news story useful.