www.garudavega.com

என் உடம்புல எனக்கு பிடிச்ச பகுதி இது தான்! காதலருடன் வீடியோவில பதில் அளித்த ஸ்ருதிஹாசன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை: நடிகை ஸ்ருதிஹாசன் இன்ஸ்டாகிராமில் பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். 

shruthi haasan shared her interest likes via instagram story

ஊரடங்கு காலத்தை சமூக வலை தளங்களில் செலவு செய்த நடிகைகளில்  ஸ்ருதி ஹாசன் முக்கியமானவர். வேலை செய்வது, உணவு சமையல் குறிப்புகளைப் பகிர்வது, தனது பூனை கிளாராவுடன் விளையாடுவது, மற்றும் மேக்கப் மற்றும் பேஷன் சார்ந்த  போட்டோ சூட் ஆகியவற்றை சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பகிர்ந்து வந்தார். மேலும் ஸ்ருதிஹாசன் காதலருடன் கேம் ஆடும் வீடியோவையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி இருந்தார்.

shruthi haasan shared her interest likes via instagram story

 முன்பு லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேலை என்ற தியேட்டர் ஆர்டிஸ்டை காதலித்தார். பின் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2019ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். தற்போது அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த சாந்தனு ஹசாரிகாவுடன் ஸ்ருதிஹாசனுக்கு காதல் மலர்ந்துள்ளது. ஸ்ருதி ஹாசன் கடைசியாக எஸ்பி ஜனநாதனின் கடைசி படமான 'லாபம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 

shruthi haasan shared her interest likes via instagram story

இந்த லாபம் திரைப்படம் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அடுத்ததாக ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக பிரபாஸுடன் இணைந்து 'சலார்' என்ற படத்தில் அவர் நடிக்க உள்ளார். இந்த படம் ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் படமாக்கப்படுகிறது. ஸ்ருதிஹாசன் தற்போது 'NBK 107' என்ற புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் கதாநாயகியாக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது பாலகிருஷ்ணாவின் கேரியரில் 107வது படமாக உருவாகவுள்ளது. 'பலுபு' மற்றும் 'கிராக்' போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய ஸ்ருதி, இயக்குனர் கோபிசந்துடன் இணைந்து பணியாற்றுவது இது மூன்றாவது முறையாகும்.

shruthi haasan shared her interest likes via instagram story

இந்நிலையில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு நடிகை ஸ்ருதிஹாசன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதில் அளித்துள்ளார். அதில் பிடித்த இசையமைப்பாளர் யார் என்ற கேள்விக்கு ஏ.ஆர்.ரஹ்மான் என்றும், சென்னையில் பிடித்த இடம் பற்றிய கேள்விக்கு எல்டாம்ஸ் சாலை வீடு என்றும் கூறியுள்ளார். மேலும் தனது உடலில் தனக்கு பிடித்த பகுதியாக இதயம், மூளை, கீழ் முழங்கால் தசையையும் குறிப்பிட்டுள்ளார். 

என் உடம்புல எனக்கு பிடிச்ச பகுதி இது தான்! காதலருடன் வீடியோவில பதில் அளித்த ஸ்ருதிஹாசன்! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Shruthi haasan shared her interest likes via instagram story

People looking for online information on Actress, Actress Shruthi, Instagram, Shruthi Haasan will find this news story useful.