www.garudavega.com

சூப்பர் ஹிட் டிரெண்டிங் தமிழ் பாட்டு.. தங்கச்சியுடன் டான்ஸ் ஆடிய கிரிக்கெட்‌ பிரபலம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாயாஸ் ஐயர் தமது தங்கையுடன் நடனம் ஆடும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Shreyas Iyer Dancing with His Sister for Enemy Movie Tum Tum Song

Also Read | 'தங்கலான்' படப்பிடிப்பில் ஹாலிவுட் நடிகர்.. விக்ரம் எடுத்த கலர்ஃபுல்லான போட்டோஸ்.. TRENDING

இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கிய திரைப்படம் 'எனிமி'. இந்த படத்தில் விஷால் மற்றும் ஆர்யா  சேர்ந்து நடித்தனர். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடித்தனர். 

'எனிமி' படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் தயாரித்திருந்தார். இசையமைப்பாளராக தமனும், ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகரும், கலை இயக்குனராக டி.ராமலிங்கமும் பணிபுரிந்தனர்.‌

Shreyas Iyer Dancing with His Sister for Enemy Movie Tum Tum Song

இந்த திரைப்படம், 2021 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற டும் டும் பாடல் தற்போதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமன் இசையில் அமைந்த இந்த திருமண கொண்டாட்ட பாடல், தற்போது உலகம் முழுவதும் டிரெண்ட் ஆகி வருகிறது. பிரபலங்கள் பலர் இந்த பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் ஆக வெளியிட்டு வருகின்றனர். தமன் இசையில் விவேகா பாடல் வரிகளில் இந்த பாடல் அமைந்துள்ளது.

Shreyas Iyer Dancing with His Sister for Enemy Movie Tum Tum Song

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் தங்கை ஷ்ரேஸ்டா ஐயர், தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த பாடலுக்கு தனது அண்ணன் ஷ்ரேயாஸ் ஐயர் உடன் நடனம் ஆடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். 6 லட்சம் லைக்குகளை பெற்று இந்த வீடியோ காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Also Read | "மைனஸ் 12 டிகிரி குளிரில் ஷூட்டிங்".. 'LEO' படம் குறித்து மிஷ்கின் வெளியிட்ட வைரல் அறிக்கை!

மற்ற செய்திகள்

Shreyas Iyer Dancing with His Sister for Enemy Movie Tum Tum Song

People looking for online information on Enemy Movie, Enemy Movie Tum Tum Song, Shreyas Iyer, Shreyas Iyer Dancing with His Sister will find this news story useful.