கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு வருகிற மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதரவற்றோர்களுக்கு தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள் தங்களால் இயன்ற உதவிகளை செய்துவருகின்றனர்.
மேலும் விலங்குகள், பறவைகள் தனித்து விடப்பட்டுள்ளதாகவும் அவைகளுக்கு தங்களால் இயன்ற அளவிற்கு உதவுங்கள் என்றும் பிரபலங்கள் அவ்வப்போது விழிப்புணர்வு வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நடிகை ஸ்ரத்தா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''கொரோனா வைரஸ் நம்மை தனிமைப்படுத்தி விட்டது. அதன் காரணமாக நாம் மன அழுத்தம், தனிமை உள்ளிட்டவற்றிற்கு ஆளாகியுள்ளோம். விலங்குகளுக்கும் இதே உணர்வுகளில் தான் இருக்கும்.
மில்லியன் கணக்கில் விலங்குகள் தனிமைப்படுத்துகின்றனர். இதன் காரணமாக விலங்கள் தங்களை தாங்களே துன்புறுத்திக்கொள்கின்றன. இதன் காரணமாக மனநிலை பாதிக்கப்படுகிறது. நீங்க இந்த விலங்குகள் நீண்ட நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டு தான் இருக்கின்றன. நாம் இங்கு விருந்தாளி தான். மாஸ்டர் இல்லை என்று தெரிவித்தார்.