தளபதி விஜய் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். குறிப்பாக அவரது நடனத்தை ரசிக்காதவர்களே இல்லையென்று சொல்லிவிடலாம். எவ்வளவு கடினமான ஸ்டெப் என்றாலும் தனது ஸ்டைலில் வெகு எளிதாக செய்து விடுவார்.
அதன் காரணமாக அவரது பெரும்பாலான பாடல்கள் சூப்பர் ஹிட்டாகிவிடும். அப்படி தளபதி விஜய்யின் 'லவ் டுடே' படத்தில் இடம்பெற்ற 'என்ன அழகு' பாடல் இன்றளவும் மிகவும் பிரபலம். இந்த பாடலில் பிரபல நடன இயக்குநர்களான ஷோபி மற்றும் ராபர்ட் உள்ளிட்டோர் தளபதி விஜய்யுடன் இணைந்து டான்ஸ் ஆடியிருப்பர்.
இந்நிலையில் சமீபத்தில் நிகழ்வு ஒன்றில் இருவரும் மீண்டும் இணைந்து அந்த பாடலுக்கு நடனமாடியிருந்தனர். அந்த வீடியோவை தனது ட்விட்டர் பகிர்ந்த ஷோபி மாஸ்டர், ''அழகான நினைவுகள், 22 வருடங்களுக்கு பிறகு ஒரே பாட்டுக்கு சகோதரர் ராபர்ட்டுடன் இணைந்து டான்ஸ் ஆடினோம்'' என்று தெரிவித்திருந்தார்.
அதற்கு பிரபல நடன இயக்குநரும் 'மாஸ்டர்' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்தவருமான சதிஷ் கிருஷ்ணன், ''சும்மா தெறிச்சுட்டீங்க, இந்த ஒரு ஸ்டெப் பண்ணி ஃபிரேம் அவுட் ஆவிங்க பாருங்க , எப்பா புல்லரிக்கும் தருணம்'' என்று அந்த பாடலின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளார்.
😍🕺🕺👍 Lovely memories 😍 After 22 years Danced for same song #EnnaAzhagu #என்னஅழகு #லவ்டுடே #LoveToday @actorvijay sir 😍👍
with My Dear Brother Robert #Robert #RobertMaster #shobimaster #TANTTNNIS #gettogethercelebration #90sDancersBatch 😍🙏 God Bless pic.twitter.com/yjcCM8K7Y7
— Shobi Paulraj (@shobimaster) June 1, 2020