www.garudavega.com

"கடவுள் என்ன நினைக்கிறாரோ".. விஜய்யின் அரசியல் ஈடுபாடு குறித்து பதில் அளித்த ஷோபா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விஜய்.

Shobha Chandrasekhar Answered about Vijay Political Entry

தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். விஜய் தமிழகத்தில் மட்டுமல்லாது பரவலான ரசிகர்களை அண்டை மாநிலங்களிலும் கொண்டுள்ளார்.

நெல்சன் இயக்கிய 'பீஸ்ட்' படத்தில் விஜய் கடைசியாக  திரையில் காணப்பட்டார். பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் ரிலீஸ் ஆனது. Beast படத்திற்கு பிறகு 'வாரிசு' படத்தில் விஜய் நடிக்கிறார். இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்குகிறார்.

Shobha Chandrasekhar Answered about Vijay Political Entry

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  பொங்கலுக்கு இந்த படம் வெளியாக உள்ளது.

வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் கேங்ஸ்டர் வகைமையில் உருவாக உள்ளது என லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். இந்த படத்தின் ஆரம்பக் கட்ட முன் தயாரிப்பு பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார்.

Shobha Chandrasekhar Answered about Vijay Political Entry

இந்நிலையில் நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் செய்த பிறகு ஷோபா சந்திரசேகர் பத்திரிகையாளர்களை சந்தித்து சில கேள்விகளுக்கு பதில் அளித்தார். குறிப்பாக விஜய் அரசியலில் ஈடுபடுவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்ற கேள்விக்கு "அது பற்றி ஒன்னுமே தெரியாது.  அது பற்றி ஒன்னுமே தெரியாது." என்று பதில் அளித்தார். மேலும் அரசியலில் ஆலோசனை & அறிவுரை எதாவது? என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஷோபா, "ஒன்னுமே கிடையாது. விஜய் என்ன முடிவு எடுக்கிறாரோ அதான். கடவுள் என்ன நினைக்கிறாரோ அதான்." என ஷோபா சந்திரசேகர் பதில் அளித்தார்.

Tags : Vijay

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Shobha Chandrasekhar Answered about Vijay Political Entry

People looking for online information on Vijay will find this news story useful.