www.garudavega.com

PRIORITY யாருக்கு?.. கணவருக்கா?.. மகனுக்கா?.. ஒரே வார்த்தையில் நச்னு பதில் சொன்ன ஷோபா!!.. EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். இவரது நடிப்பில், இதற்கு முன்பு வாரிசு திரைப்படம் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்திலும் விஜய் நடித்து வருகிறார்.

Shoba opens up about priority on sa chandrasekhar and vijay

Images are subject to © copyright to their respective owners

நடிகர் விஜய்யின் தந்தை S.A. சந்திரசேகர் திரைப்பட இயக்குனராக உள்ளார். அவரது இயக்கத்தில் ஆரம்ப காலகட்டத்தில் திரைப்படங்கள் நடித்து புகழ் பெற்றதன் மூலம் சிறந்த நடிகர் என்று தமிழ் சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் விஜய்.

அதே போல, விஜய்யின் தாயார் ஷோபாவும் பாடகியாக வலம் வருகிறார். ஷோபா தமிழ் திரையுலகில் பல கிளாசிக் ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். இவர்கள் இருவருமே விஜய்யின் ஆரம்பகால திரைப்படப் பயணத்துக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்தவர்கள்.

சுவாரஸ்ய விஷயம் பகிர்ந்த ஷோபா

இந்நிலையில் நடிகர் விஜய்யின் தாயார், ஷோபா சந்திரசேகர், தற்போது Behindwoods சேனலில் பிரத்தியேக பேட்டி அளித்தார். பிரபல நடிகையும், இயக்குநரும், சமூக ஆர்வலருமான லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் நேர்காணல் செய்தார். இதில், தனது கணவர் S.A. சந்திரசேகர் மற்றும் மகன் விஜய் குறித்தும், தனது குடும்பத்தினர் குறித்தும் என பல சுவாரஸ்ய பதில்களை ஷோபா சந்திரசேகர் பகிர்ந்து கொண்டார். மேலும் தனது மருமகளும், விஜய்யின் மனைவியுமான சங்கீதா குறித்தும் நிறைய விஷயங்களை இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார் ஷோபா சந்திரசேகர்.

Images are subject to © copyright to their respective owners

அது மட்டுமில்லாமல், தான் திரைப்படங்கள் இயக்கி உள்ளது பற்றியும், கணவர் மற்றும் இயக்குனர் S.A. சந்திரசேகருடன் ஸ்க்ரிப்ட் டிஸ்கஷனில் இருந்தது பற்றியும் நிறைய விஷயங்களை பேசி இருந்த ஷோபா, விஜய்யை வைத்து திரைப்படம் இயக்க வேண்டும் என்ற ஆசை குறித்தும், விஜய்க்கு அம்மாவாக திரைப்படத்தில் தோன்ற வேண்டும் என்பது பற்றியும் நிறைய பேசி இருந்தார்.

"Priority யாருக்கு?"..

இதற்கு நடுவே, "இப்ப Priority -ன்னு பார்த்தா சந்திரசேகர் சாரா?, இல்ல விஜய்யா?" என்ற கேள்வி கேட்ட லட்சுமி ராமகிருஷ்ணன், சந்திரசேகர் சார் அவரது படத்திற்கு Preview எனக்கூறி அழைப்பதாகவும், அதே நாளில் தன்னுடன் ஒரு நிகழ்வுக்கு வருமாறு மகன் விஜய் அழைக்கும் பட்சத்தில் யாருக்கு முன்னுரிமை கொடுப்பீர்கள் என கேட்டார்.

Images are subject to © copyright to their respective owners

இதற்கு பதில் சொல்லும் ஷோபா, "விஜய்க்கு. ஏன்னா தனியா ஒரே நாளுல அவரு (S.A. சந்திரசேகர்) கூப்பிட மாட்டார். நான் அங்க தான் போவேன்னு நல்லா தெரியும். அப்படி நீங்க கேட்டீங்கன்னா விஜய் தான்" என தெரிவித்தார்.

PRIORITY யாருக்கு?.. கணவருக்கா?.. மகனுக்கா?.. ஒரே வார்த்தையில் நச்னு பதில் சொன்ன ஷோபா!!.. EXCLUSIVE வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Shoba opens up about priority on sa chandrasekhar and vijay

People looking for online information on Priority, SA Chandrasekhar, Shoba chandrasekar, Vijay will find this news story useful.