தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். இவரது நடிப்பில், இதற்கு முன்பு வாரிசு திரைப்படம் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்திலும் விஜய் நடித்து வருகிறார்.
Images are subject to © copyright to their respective owners
நடிகர் விஜய்யின் தந்தை S.A. சந்திரசேகர் திரைப்பட இயக்குனராக உள்ளார். அவரது இயக்கத்தில் ஆரம்ப காலகட்டத்தில் திரைப்படங்கள் நடித்து புகழ் பெற்றதன் மூலம் சிறந்த நடிகர் என்று தமிழ் சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் விஜய்.
அதே போல, விஜய்யின் தாயார் ஷோபாவும் பாடகியாக வலம் வருகிறார். ஷோபா தமிழ் திரையுலகில் பல கிளாசிக் ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார்.
ஷோபா சந்திரசேகரின் ஜாலி ஷேரிங்ஸ்
இந்நிலையில் நடிகர் விஜய்யின் தாயார், ஷோபா சந்திரசேகர், தற்போது Behindwoods சேனலில் பிரத்தியேக பேட்டி அளித்தார். பிரபல நடிகையும், இயக்குநரும், சமூக ஆர்வலருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நேர்காணல் செய்தார். இதில், தனது கணவர் S.A. சந்திரசேகர் மற்றும் மகன் விஜய் குறித்தும், தனது குடும்பத்தினர் குறித்தும் என பல சுவாரஸ்ய பதில்களை ஷோபா சந்திரசேகர் பகிர்ந்து கொண்டார். மேலும் தனது மருமகளும், விஜய்யின் மனைவியுமான சங்கீதா குறித்தும் நிறைய விஷயங்களை இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார் ஷோபா சந்திரசேகர்.
அது மட்டுமில்லாமல், தான் திரைப்படங்கள் இயக்கி உள்ளது பற்றியும், கணவர் மற்றும் இயக்குனர் S.A. சந்திரசேகருடன் ஸ்க்ரிப்ட் டிஸ்கஷனில் இருந்தது பற்றியும் நிறைய விஷயங்களை பேசி இருந்த ஷோபா, விஜய்யை வைத்து திரைப்படம் இயக்க வேண்டும் என்ற ஆசை குறித்தும், விஜய்க்கு அம்மாவாக திரைப்படத்தில் தோன்ற வேண்டும் என்பது பற்றியும் நிறைய பேசி இருந்தார்.
கணவரா? மகனா?
நடுவே தனது கணவர் S.A. சந்திரசேகர் மற்றும் மகன் விஜய் ஆகிய இருவரில் யாருக்கு முன்னுரிமை கொடுப்பீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு விஜய் தான் என ஷோபா பதில் சொல்லி இருந்தார். இதே போல, சில கேள்விகளை லட்சுமி ராமகிருஷ்ணன் முன் வைத்திருந்த சூழலில், அவை அனைத்திற்கும் ஷோபா சொன்ன பதில் தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது.
விஜய் அம்மா பையனா? அப்பா பையனா?
"மகன் விஜய்யை மாஸ் ஹீரோவாக பிடிக்குமா?.. அல்லது ரொமான்டிக் ஹீரோவாக பிடிக்குமா?" என லட்சுமி ராமகிருஷ்ணன் கேட்க, "மாஸ் ஹீரோவா ரொமான்டிக் பண்றது பிடிக்கும்" என ஒரு அதிரடி பதிலை ஷோபா தெரிவிக்கிறார். தொடர்ந்து பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன், "பயங்கரமான ஆளு (சிரித்தபடி). விஜய் வந்து அப்பா பையனா?.. அம்மா பையனா?" என அடுத்த கேள்வியை முன் வைக்கிறார்.
இதற்கும் அசத்தலான பதில் ஒன்றை ஷோபா தெரிவித்தார். "விஜய் எங்க பையன்" எனக் கூறியதுமே வியந்து பார்த்து சிரிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன், "பயங்கர டிப்ளமேட்டிக் இல்ல மேம்" என்கிறார். "அப்படி எல்லாம் இல்ல. தனியா அப்படி சொல்ல முடியாதுல்ல. அவருக்கு ரெண்டு பேரையும் பிடிக்கும். அதனால எங்க பையன்" என விளக்கம் கூறினார்.